புதியவை

01. லவ்ஹூம் படைத்தது (இஸ்லாமிய பார்வையில் உலகம்) - மிஹிந்தலை ஏ.பாரிஸ்


இறைவன்
இன்மை மறுமை
இரண்டின் தலைவன்!
அவன் மட்டும்
தனித்தே இருப்பான்
இணைதுணை
இல்லாதவன் அவனையே
அல்லாஹ் என்று தொழுகிறோம்
அவனிடமே
அனைத்தும் பெறுகிறோம்!

அவனே
அகிலம் விரித்தான்
அதில் சிறப்புக்களை பொறித்தான்!

படைப்பில்
முதல் உருவாக்கம்
ஒரு பலகை
அதுவே உலகில்
இறைவனின்
முதல் கருவாகும்!

அதன் பொன்னான பெயர்
லவ்ஹ{ல் மஹ்பூல்
அதன் தமிழ் வடிவம்
பாதுகாக்கப்பட்ட பலகை!
ஏன் பலகையை
முதலில் படைத்தான்...?
ஏன் பாதுகாத்தான்...?
அதுதான்
விஞ்ஞான உலகில்
விக்கலடிக்கும்
விகடகவி கேள்விகள் அல்லவா...?
அல்லாஹ் பாதுகாக்கட்டும்!

அதுதான்
அல்லாஹ்வின் ஏடு!
அதில்தான்
அவன் உருவாக்கம்
தோற்றுவிக்க இருக்கும்
தொடர்ப்பட்டியல்
நிகழவிருக்கும் நிஜங்களை
எல்லாம் பதிவேற்றினான்
அவனே பாதுகாத்தான்!

வெளுத்த முகத்தில்
இருந்தே அதனை
பொழிவோடு படைத்தான்!
அதை அழகான வரிகளால்
அகிலத்தின் 
ஆயுளை நனைத்தான்!


அதன் இல்மை
அதாவது அறிவை
அறியும் சக்தி
இறைவன் மட்டுமே அறிவான்!

அதற்கு கால்கள்
இரண்டு உண்டு
அவை சிவந்த மாணிக்கம்
அதன் எழில் கூற
மொழி இல்லை!
கூற எளிய வழி
மொழியில் அகப்படாது
அந்தளவு உயர்ந்த படைப்பு!
உண்ணதப்பொக்கிசம்!

அதன் பருமன்
வர்ணிக்ககூடாத அமாணிதம்
அது ஒரு இறைக்கடமை!
நிறைவேற்றும் கடமை
எமக்கானது!
மனிதன் இறைவனின்
அடிமையல்லவா...?
அதையாவது நிறைவேற்றுவோம்!

(கவி நடையிலான  தொடர்)

குறிப்பு : ( அறிவிப்பவர் இபுனு அப்பாஸ் றலியல்லாஹூ  அன்ஹூ அவர்கள் )

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.