புதியவை

02. ஹலம் படைப்பு (இஸ்லாமிய பார்வையில் உலகம்) - மிஹிந்தலை ஏ.பாரிஸ்


லவ்ஹூலைத் தொடர்ந்து
பிறந்ததுதான் ஹலம்!
அதன் தமிழ் வடிவம்
எழுதுகோல்
அல்லது பேனா எனலாம்!
தூரிகையெனும் சொல்லும்
பளபளக்கும் வார்த்தையானாலும்
அதன் பொலிவிடம்
தோற்று விடும்
ஆத்தனை மொழிகளும்!

அதனை எழுதுகோல்
என்ற போதும்
ஏக்கர் கணக்கு நீளமானது
சுமார் 
ஐந்நூறு வருடம் தூரத்தை 
தன் வசம் வைத்திருக்கும்
தனக்கே நிகரான
கருவில் உருவான ஒரு 
உண்ணதப் பொருள்!

அதை இரத்தினத்தில்
இருந்தே பிரசவித்தான்
அதன் ஒளி
முலாம் பூசப்பட்டிருக்கும்
அழகு கொஞ்சும் பொன்னிறம்!
பிரகாசம்...
பரிதி காணாத வெண்நிறம்
கண்களை மழுங்கடிக்க வைக்கும்
சக்தி அதற்கு உண்டு!

அதன் முனை
மனம் கவரும் படி
பிளக்கப்பட்டிருந்தது
ஆழகிய ரோஜாவாக....!
பேரொளி ஒன்று வீசிய வண்ணம்!

ஒரு சப்தம்
திடிரெண்டு ஒலித்தது
அது எழுது எனும்
அதிரடிக்கட்டளை!

குரல் ஓசை கேட்டவுடன்
தஸ்பீஹ் செய்து
அதாவது இறைவனின்
புகழ் நாமம்
உச்சரித்த வண்ணம்
இல்லையேல் துதித்த வண்ணம்
பணியை பரவசத்தோடு துவங்கியது!


குரல் ஒலியினால்
அமளி கொண்ட ஹலம்
படபடத்து கடகடத்து
அஞ்சிய வண்ணம்
நிஜங்களை எழுதியது....!
இறைவன் உரைகளை
இம்மியளவும் தவறில்லாமல்
தரணியின் உண்மை
தலைவிதியை எழுதியது!

அடியார்களின் ஒவ்வொருவர்
தலை விதியம் 
அகிலத்தின் ஒவ்வொரு துளியும்
பொன்னெழுத்தில் பதித்தது!


இறையடியான்
எதைச்செய்ய வேண்டுமென்று
இறுதித்துளியில்
உறுதிப்படுத்தியதும்
ஹலம் உலந்து போனது
லவ்ஹூல் நிறைந்து போனது
அதன் பின்னர்
அவனே உயர்தி பாதுகாத்தான்
லவ்ஹூல் மஹ்பூல் எனும்
திருநாமும் சூட்டினான்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.