புதியவை

03. தண்ணீர் படைப்பு (இஸ்லாமிய பார்வையில் உலகம்) - மிஹிந்தலை ஏ.பாரிஸ்


வானம் பூமி
இரண்டுக்கும் நடுப்பரப்பில்
முத்து ஒன்றை
முழு நிலவை போல்
பிரசவம் செய்து வைத்தான்!

முத்து பேசும் வண்ணம்
எழுபதாயிhம் நாக்குக்களை
பூக்க வைத்தான்!
நாக்குக்கள் முளைத்ததும்
அவை நன்றியுரை நிகழ்தின!


எழுபதாயிரம் நாக்குக்களும்
எழுபதாயிரம் மொழிகளில்
எண்ணிலடங்காத முறைகள்
தஸ்பீஹ் எனும்
அவன் புகழ் பாடும்
பாக்களை பாடியது
பூக்களைத்தூவிய வண்ணம்
பொன்னான மொழிகளில்!

முத்துக்கும் கண் வைத்தான்
பௌர்ணமி நிலாவின்
ஓளி கொண்டு
பார்வை கொடுத்தான்!

அதன் சக்தி
பெரும் மலையைப் போட்டாலும்
வலிமை நிறைந்த கடலில்
சிறு விதை போலாகும்!

பின் அல்லாஹ்
அதனை அழைத்தான்
அது பின் கரைந்து
தளும்பித் தளும்பி தலைவணங்கி
தண்ணீராக மாறி விட்டது!

அதில் அலைகள்
சிறு சிறு மலைகலாக தோன்றியது
அலைகள் ஒன்றுடன் ஒன்று
முட்டி முட்டி மோதியது!

அலைகளின் மோதல்கள்
சாதிச்சண்டைகள் அல்ல..
மனிதன் நடத்தும்
இன்றைய இனமோதலும் அல்ல..!
அது ஒரு புனிதப்போர்
இறைவனை துதிக்கும் கடமைப்போர்!

அதாவது
தண்ணீர் அசைந்தும்
அலைகளாக உயர்ந்தும்
பின் பணிந்தும்
தஸ்பீஹ் செய்கிறது!
அதுவே படைத்தவனை
தினமும் நினைத்து
ஐவேளை தொழுகை போல
தண்ணீரும் வணங்கத்துவங்கியது!

பின் அல்லாஹ்
ஒடுங்கி விடு என்று
உத்தரவு பிறப்பித்தான்
உடன் அது சுருங்கி
கலக்கம் எதுவும் இல்லாமல்
நுரைகள் விலகி
தெளிந்த தண்ணீராக தோன்றியது...
அவன் ஏவலை
அப்படியே ஏற்றுக்கொண்டது!

தண்ணீர் இல்லாமல்
தரணி இல்லை
உயிரினங்களை உற்பத்தியாக்கவும்
இறப்பை நிழத்தவும்
உரிமை கொடுத்தான்
உயர்ந்த இடத்தைக் கொடுத்து
கௌரவம் அளித்தான்

இன்மை மறுமை இரண்டிலும்
இன்றியமையாத வஸ்தாக திகழ்வது
தண்ணீர்தான்
அதற்கு காரணம்
அதனுடைய தஸ்பீஹூம்
இறைப்பற்றுதலாக கூட இருக்கலாம்
அதை அவனே அறிவான்!

இறைவன் தண்ணீரை
அவன் படைப்பு வரிசையில்
ஒரு உயர் இடத்தில்
உயர்த்தி வைத்தான்!

குறிப்பு : அறிவிப்பவர் கஹூபு றலியல்லாஹூ அன்ஹூ அவர்கள்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.