புதியவை

04. அர்ஷ் படைப்பு (இஸ்லாமிய பார்வையில் உலகம்) - மிஹிந்தலை ஏ.பாரிஸ்


அர்ஷ் என்பது
ஒரு மையம்
அல்லது ஒரு இடம்
அனைத்தையும் தாண்டி
ஒரு புனித தேசமாகக் கூட
அது இருக்கக் கூடும்.
அது எங்கு இருக்கிறது
அதன் துள்ளியமான 
தகமை செயற்பாட்டு முறைகள்
அறிந்து வைத்துள்ளவன்
இறைவன் மட்டுமே!

அதை ஒரு வித
பசுமையான இரத்தினத்தில்
இருந்து உற்பத்தி செய்தான்
அதன் ஒளி நிறம்
அழகிய தோற்றம் போன்ற
விபரம் தெரிந்தவன்
வல்லவன் வலிமையுள்ளவன்
அல்லாஹ் ஒருவனே
அறிந்து வைத்துள்ளான்!

எழுபதாயிரம் 
நாக்குகள் அதற்கு இருக்கும்
எழுபதாயிரம் மொழியில்
அது தினமும்
தஸ்பீஹ் செய்த வண்ணம்
தன் இறைவனைத் துதிக்கும்
ஞாபகப்படுத்தும்!

தண்ணீருக்கு மேலே இருந்து
தலை வணங்கியது

தினமும் ஓயாமல்
தஷ்பீஹ் செய்வதால்
அதன் நாக்குகள்
வரண்டு போகும்
ஆனாலும் கூட
இறைவனின் திருநாமம்
ஓவ்வொரு நொடியும் ஓதும்
அது இன்றியமையாத காரியம்!
ஆனாலும் தினமும் ஓதும்
அதனை இதுவறை
எவரும் கண்டது கிடையாது
அதனை வானம் பூமி
இரண்டுக்கும் முன்னாலேயே
படைத்து விட்டான் 
எனும் தகவல் உலகில்
அனைவரையும் சிந்திக்க வைக்கிறது!

உருவாக்கம் என்பது
உலகில் பல சாதனைகள்
செய்த வண்ணம்
எல்லோரையும் திகைக்க வைத்து
சாதனை சாம்ராஜ்யத்தில்
சிறகடிக்கலாம்...
ஆனாலும் கூட
அனைத்துப்படைப்புகளையும் விட
அற்புதமான படைப்பு
இறைவன் படைப்பு மட்டுமே!

என்ன அவ்வளவு புதுமை...?
நாம் எதையாவது செய்தால்
அல்லது கட்டடம் ஒன்றை
நிர்மாணிக்கத்துவங்கினால்
அதை கீழே இருந்து
மேலே உயர்துவோம்
அதாவது 
அடித்தளம் போட்டுத்தான்
வேலையை ஆரம்பிப்போம்
ஆனால் இறைவனே
மேலே கட்டி விட்டு
அடித்தளம் போட்டுள்ளான்!

ஆர்ஷ் என்ற விடயம்
வானம் பூமிக்கு
முதலே படைத்து விட்டான்
அப்படியானால்
அதன் இருப்பிடம் பற்றி
நாம் சிந்திப்போம்
அவன் தெரிந்து வைத்துள்ளான்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.