புதியவை

இன்று மட்டும் 24 மணி நேரம் + 1 நொடி! பாதிப்பை ஏற்படுத்துமா லீப் செகண்ட் ?

ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இன்று மட்டும் 24 மணி நேரம் + ஒரு நொடி கூடுதலாக இருக்கும். அதை தான் லீப் செகண்ட் என்கிறோம். அதாவது இன்றைய நாளின் கடைசி நிமிடத்துக்கு மட்டும் 61 நொடிகள் என்ற அளவில் கணக்கிடப்படும். இதற்கு காரணம் நாம் ஒரு நாளை 84600 நொடிகள் என்று தான் கணக்கில் எடுத்து கொள்கிறோம். ஆனால் பூமியோ ஒரு நாள் என்பதை 84600.002 நொடியாக தான் ஒரு சுழற்சிக்கு எடுத்து கொள்கிறது. அதனால் இது போன்ற லீப் செகண்டை ஜூன் 30 அல்லது டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் ஏதாவது ஒரு ஆண்டில் சேர்க்கும் முறை 1972ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


1972ம் ஆண்டு முதல் இதுவரை 25 நாட்கள் லீப் செகண்ட் சேர்க்கப்பட்டுள்ளது. இன்று சேர்க்கப்படுவது 26வது முறையாகும். இதில் ஜூன் 30ம் தேதி 10 முறையும், டிசம்பர் 31ம் தேது 15 முறையும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நொடி எப்படி சேர்க்கப்படுகிறது எனில் 23:59:59 என முடிந்து 00:00:00 என துவங்குவதற்கு இடையே ஒரு நொடி அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டு மீண்டும் செயல்பாடு துவங்கவதன் மூலம் ஒரு நொடி பூமியின் சுழற்சியோடு ஒத்துப்போக வழிவகை செய்கிறது.
லீப் நொடியால் பாதிப்பா?
 1972ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வரும் இந்த லீப் நொடி கடைசியாக கடந்த 2012ம் ஆண்டு ஜூன் 30ம் தேதியோடு சேர்க்கப்பட்டது. அந்த நாளில் பல பெரிய பாதிப்புகள் நிகழ்ந்தன.  மிகப்பெரிய நிறுவனங்களான மொஸில்லா, ரெடிட், ஃபோர் ஸ்கோயர், யெல்ப், லிங்க்டுஇன் மற்றும் ஸ்டெம்பிள்டன் ஆகிய நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகி முடங்கிபோயின. லினெக்ஸ் செயல்பாடுகள் முடங்கிபோனது பாதிப்புக்கு காரணமாகின. மேலும் சில ஜாவாவை அடிப்படையாக கொண்டு செயல்படும் நிறுவனங்கள் முடங்கின. 

அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியாவில் 400க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறக்கப்பட்டன. இதற்கு காரணம் லீப் நொடியால் குவாண்டாஸ் செக் இன் செயலிழந்து போனது என கூறப்பட்டது.
இந்த வருடம் என்ன ஆகும்?
 2015ம் ஆண்டு தற்போது ஜூன் 30ம் தேதி இந்த லீப் செகண்ட் மீண்டு வருவதால் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கூகுள்  இந்த ஒரு நிமிடத்தை கடக்க புதிய திட்டத்தை வைத்துள்ளதாக கூறியுள்ளது. இதன் மூலம் 20 மணி நேரத்துக்கு முன்னதாக கூகுள் அனைத்து சர்வர்களும் இணைய துவங்கும் இந்த செயல்பாடு முடியும் போது லீப் நொடி கடக்கப்பட்டிருக்கும் என கூகுள் கூறியுள்ளது. அதே போல அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது என்பதால் அமெரிக்க பங்குச் சந்தை இந்த லீப் நொடியை மறுநாள் புதன்கிழமை சந்தை ஆரம்பிக்கும் நேரத்துக்கு முன்னதாக கணக்கில் சேர்த்து கொள்ளும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இன்டர்கான்டினென்டல் எக்ஸ்சேஞ்ச் இந்த லீப் நொடி எங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் எங்கள் பங்கேற்பாளர்களுக்கு எங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது என கூறியுள்ளது.
 அதனால் இந்த வருடம் சில நிறுவனங்களும் , சில வர்த்தகங்களும்  பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. பூமியின் சுழற்சி சரியாக பிரிக்கப்படாததால் இந்த நொடியை சேர்த்தே ஆகவேண்டும் என்ற நிலை உள்ளது. இல்லையெனில் பூமியின் சுழற்சியில் நாம் ஒரு நொடியை நாம் இழக்க நேரிடும். அதனால் நாம் வாழ்க்கையில் ஒரு நொடி காணமல் போக வாய்ப்புள்ளது என்கின்றனர் அறிவியல்வல்லுனர்கள். இன்று சர்வதேச அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் இந்த லீப் நொடியில் செல்ஃபி எடுக்க தயாராக இருப்பதாக கூறுகிறது இன்னொரு  கூட்டம். எப்படியோ இன்று மட்டும் ஒரு நாள் 24 மணி நேரம் இல்லை 24 மணி நேரம் + 1 நொடி.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.