புதியவை

"எவரெஸ்ட் மலைச்சிகரம் 3 செ மீ நகர்ந்துள்ளது"


அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின் காரணமாக, எவரெஸ்ட் மலைச்சிகரம் மூன்று செண்டிமீட்டர் தென்மேற்காக நகர்ந்துள்ளது என சீனாவிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அந்த மலையின் உயரத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை என சீனாவின் தேசிய கணக்கெடுத்தல், வரைபடங்கள் மற்றும் புவிசார் தகவல்களுக்கான நிர்வாகம் அறிவித்துள்ளது.
நேபாளத்தில் 7.8 ரிக்டர் அளவுகொண்ட அந்தக் கடுமையான நிலநடுக்கத்தின் காரணமாக எட்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். உடமைகளுக்கு பெரும் சேதமும் அழிவும் ஏற்பட்டன.
அந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஏராளமான நிலச்சரிவுகளும், பனிசரிவுகளும் ஏற்பட்டன.
இதே வேளை தலைநகர் காட்மாண்டு நகரமும்கூட தெற்கு நோக்கி இரண்டு மீட்டர்கள் நகர்ந்துள்ளது என நேபாள விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட இந்தக் கடுமையான நிலநடுக்கத்துக்குப் பிறகு எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் மீதும் ஏறும் நடவடிக்கைகள் தடைபட்டுள்ளன.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.