புதியவை

காதல் - ஸாரா பாஸ்


மனசெங்கும் நீ நிறைந்தாய்-என் 
மௌனத்திலும் தேன் சுரந்தாய் 
மலர்களெல்லாம் நீயே ஆனாய்-அதன் 
மணங்களிலும் நீ நிறைந்தாய்!
என் வைகறைச் சலனங்களில்
பனித் துளியாய் எனில் விழுந்தாய்.
உன் மைவிழிப் பார்வைகளால்-என்
மனசுக்குள் நீ பதிந்தாய்!
இதழ்களிலே மதுவேந்தி
என்னை நீ அழைக்கின்றாய்...
இனிப்பெடுத்து நான் பருக
என்று நீ இசைந்திடுவாய்?
சாயங்காலப் பறவைகளின்
சப்தங்களில் உன் மொழிகள்!
என் சப்தத்திலும் மௌனத்திலும்
சுற்றிடும் உன் நினைவலைகள்!
உடலெங்கும் அழகேந்தி
என்னருகில் வருகின்றாய்-
உனில் முழுதும் நான் நிறைய
எப்போது வரம் தருவாய்?
நான் தீட்டும் ஓவியத்தில்,
நான் மீட்டும் காவியத்தில்
நாயகியாய் நீ ஆனாய்...
என் நிழல்களுக்கு நிறந்தீட்டி,
நினைவுகளை நிஜமாக்க
எப்போது நீ வருவாய்?
இதயத்தை
எப்போது நீ தருவாய்?

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.