புதியவை

தனியான நகரசபையை வலியுறுத்தி சாய்ந்தமருதில் முழுஅடைப்புடன், அமைதிப் பேரணி!

சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கையை வலியுறுத்திசாய்ந்தமருது பொதுமக்கள் அமைப்பு2015-06-15 ல் சாய்ந்தமருது பிரதேசத்தில் முழுநாள் ஹர்த்தால்கடையடைப்பு செய்வதற்கு அழைப்பு விடுத்திருந்தது.

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல்,வர்த்தக சங்கம் மற்றும் நிறுவங்கள்பொது அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுப்போக்குவரத்துக்கு பாதிப்பிலாத வகையில்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்விவிற்கு ஆதரவு தெரிவித்து வர்த்தக நிலையங்கள்கடைகள்தனியார் நிறுவங்கள் மூடப்பட்டிருந்ததுடன் பாடசாலைகள் மாணவர்களின் வருகையின்மையால் வெறிச்சோடிக் காணப்பட்டன.

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் ஒன்றுகூடிய திரளான நகரசபைக் கோரிக்கையாளர்கள் தொழுகையிலும் துஆ பிராத்தனையிலும் ஈடுபட்டதுடன் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை பிரகடனம் ஒன்றும்செய்யப்பட்டதுடன், அமைதி ஊர்வலமும் இடம்பெற்றது.



No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.