புதியவை

உயிர் பிரியாத ஒரு மரணம் - வபா பாறுக்


உள்ளுனர்வுகளுக்குள் பதுங்கிக்கொண்டு
சிணுசிணுக்கும் சிந்தைகளை
நிர்ப்ப்ந்தச்சொர்க்களால்
அட்ச்சரப்பிழையின்றி கர்ச்சிதமாய்
வரையத் தெண்டிப்பது
விழியற்றவன் : விளக்கின் குருட்டில்
சிலை கடைவதை விடவும் அசாத்தியமானது
என்றாலும்
உன்ர்வுகளுக்கு உழுக்கெடுத்து
வலியிறக்கம் செய்வதற்கு
பதிவிறக்கம் செய்வதும் பிறரிடம்
பகிர்ந்துகொள்வதும் வழிகலாயின
வர்ணங்கள் தீட்டாத ஓவியம்
எண்ணங்கள் துளிராத மனவெளி
இழமையை மீட்கும் முதுமை
உயிர் பிரியா ஒரு மரணத்தையும் கூட
மிகச்சாதாரமாக சாத்தியமாக்கும் உத்தி
இருட்டுக்குள் இருக்கும் அந்த
இதயத்துமட்டுமே தெரிந்த வித்தை
கற்பனைக்கு ஏது கட்டுப்பாடு
கறணத்தையும் மிஞ்சிடும்: வேகத்தில்!
"இன்று போய் நேற்று வருவது'
ஐன்ஸ்டைனுக்கு மட்டும் எங்கணம் சாத்தியமானது
காலத்தை முந்திய,
தர்க்கத்தை தகர்த்த அவன்
கற்பனையின்
வேகத்தில் விழுந்த விதை அது!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.