புதியவை

மனிதம் இன்னும் மரித்துப் போகவில்லை.- கொ.பெ.பி. அய்யா


மனிதம் இன்னும் மரித்துப் போகவில்லை.
மழையும் முற்றும் வறுத்துக் காயவில்லை.
அங்கும் இங்கும் எங்கோ இரங்கும் மனதும்
அன்றும் இன்றும் என்றோ துலங்கும் அதிசயம்.
கூலிக்குக் கொலையும் வேலிக்குக் கரண்ட்டும்
கேலிக்குக் கொடுமை வேலைக்கு விலையும்
ஏழைக்கு வறுமை என்பதும் விதியென
வாழும் சிறுமை வாடிக்கை உலகில்
அங்கும் இங்கும் எங்கோ இரங்கும் மனதும்
அன்றும் இன்றும் என்றோ துலங்கும் அதிசயம்
மனிதம் இன்னும் மரித்துப் போகவில்லை.
மழையும் முற்றும் வறுத்துக் காயவில்லை
சாலையில் தேங்கும் சாக்கடை இறைத்து
ஏழைகள் ஏங்கும் பூக்கடை நிறைத்து
காரினில் விரையும் காசாளி திமிறு
சேறினை அறையும் பாட்டாளி வயிறில்.
அடுத்தவர் நிலைமை அறிவார் உண்டோ?
அலுத்தவர் பொறுமை புரிவார் உண்டோ?
தேடும் மனிதம் தெரிந்தது கண்டீர்--அது.
பேரிடர் பணியில் ஓடிய கண்ணீர்.
மனிதம் இன்னும் மரித்துப் போகவில்லை.
மழையும் முற்றும் வறுத்துக் காயவில்லை
அங்கும் இங்கும் எங்கோ இரங்கும் மனதும்
அன்றும் இன்றும் என்றோ துலங்கும் அதிசயம்
பொருளில் மயங்கி அருஉயிர் பறிக்கும்
கருமன மனிதர் திரிகிறார் –கொடிய
மிருகக் குணத்தில் மாமிசம் ருசிக்கும்
காமுகப் பேய்கள் அலைகிறார்.
தீயோர் நிறைந்த தேசம் இதிலும்
தேநீர் விற்கும் மனிதன்—அவன்
தேடிவந்தான் தேநீர் தந்தான்.—விபத்தில்
ஓடிய உயிரை மீட்டுத் தந்தான்—அதனால்
மனிதம் இன்னும் மரித்துப் போகவில்லை.
மழையும் முற்றும் வறுத்துக் காயவில்லை
அங்கும் இங்கும் எங்கோ இரங்கும் மனதும்
அன்றும் இன்றும் என்றோ துலங்கும் அதிசயம்
அபாயம் என்றால் அலறியோடும் கூட்டம்.
அவரவர் உயிரே அவசியம்—ஆனால்
ஆபத்து என்று அறிந்தும்கூட துணியும்
அஞ்சா நெஞ்சம் கொண்டும் மனிதம்.
பலன்னேதும். எண்ணா உணர்வில் இனிதம்
பழகும் நல்ல உள்ளம் புணிதம்
இருப்பதினாலே உலகம் இன்னும்
இயங்குது விளங்குது அவருக்காக-அதனால்
மனிதம் இன்னும் மரித்துப் போகவில்லை.
மழையும் முற்றும் வறுத்துக் காயவில்லை
அங்கும் இங்கும் எங்கோ இரங்கும் மனதும்
அன்றும் இன்றும் என்றோ துலங்கும் அதிசயம்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.