புதியவை

தாயகம் திரும்பிய ஈழ அகதிகளிற்கு எதுவித உதவிகளும் இல்லை - மக்கள் விசனம்


இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பிய அகதிகளுக்கு இதுவரை அரசாங்கத்தினால் எந்தவொரு உதவித்திட்டங்களும் வழங்கப்படவில்லை என அண்மையில் இந்தியாவிலிருந்து யாழ் திரும்பிய ஈழ அகதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த மே மாதம் இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பிய அகதிகளுக்கு இதுவரை அரசாங்கத்தினால் எந்தவொரு உதவித்திட்டங்களும் வழங்கப்படவில்லை என இந்தியாவிலிருந்து யாழ் திரும்பிய ஈழ அகதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
சொந்த நாட்டுக்கு திரும்பியும் உறவினர் வீடுகளில் கூட்டு குடும்பமாக அகதி வாழ்கையை வாழ்ந்துவருகின்றனர்.
நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக பொதுமக்கள் சிலர் 1990அம் ஆண்டுகளில் நாட்டை விட்டு வெளியேறி அயல் நாடான இந்தியாவில் தஞ்சம் அடைந்திருந்தனர்.
அவ்வாறு இருந்த சிலர் கடந்த மே மாதம்13 ஆம் ஆம் திகதி இந்தியாவின் மதுரை கூடல் நகர் அகதி முகாமில் இருந்த அகதிகள் சிலர் இலங்கை திரும்பியிருந்தனர்.
வீடுகள் யுத்தம் காரணமாக சேதமடைந்துள்ள நிலையில் அவற்றை புனரமைப்பு செய்வதற்கு அரசாங்கம் உதவிகள் செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு திரும்பியவர்கள் கீரிமலை நகுலேஸ்வரம் பகுதியில் உறவினர் ஒருவரின் வீட்டில் 12பேர் வசித்துவருகின்றனர்.
இவர்களுக்கான எந்தவொரு உதவிகளும் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்துகின்றனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.