புதியவை

போறீகளா.....போறீகளா... பொண்ணு பா(ர்)க்கப் போறீகளா - நாகினி கருப்பசாமி


பாக்கு வெத்தலை
பழம் தட்டுல வச்சி எல்லாம்
நம்ம மனசு போல அமைஞ்சா
பரிசமும் போட்டுடலாம்னு
ஆசை ஆசையா போறீகளா...(போறீகளா ...)

போறதுக்கு முன்னாடி....
பொண்ணு வீட்ல
பஜ்ஜி சொஜ்ஜி செஞ்சி
வரவேற்க்க வக்கிருக்கா....

ஸ்கூட்டர் ஃபிரிஜ் வீடு பணமுன்னு
வக்கணையா சீர் செய்ய
நல்ல வசதியிருக்கா....

குறஞ்ச பட்சம் ஒரு 100பவுன்
தங்கத்த தங்க மகளுக்கு ஒடம்புல
பூட்டி அனுப்புற துப்பிருக்கா...

கல்யாணத்துக்கப்புற(ம்)
தீபாவளி ஆடி பொங்கல்
சீமந்தப் பலகாரம்....
கொடுத்தனுப்ற யோக்கியதயிருக்கான்னு.....
...........
தெளிவா விசாரிச்சிட்டுத்தான் போவீங்க...(போறீகளா...)

நாம எதிர்பாக்குறத விட அதிகமா
செய்ய வசதியுள்ள இடம்தான்னு
சந்தோசத்துல இதல்லாம் செஞ்சுடுங்கன்னு
சகஜமா நீங்க நீட்டிமுழக்க....

சுயமா சம்பாதிச்சி வாங்க சொரணையில்லாம
எங்க வீட்டுல புடுங்க வந்தயான்னு
நாக்கப் புடுங்கற மாதிரி அந்தவீட்டுப்
பொண்ணு நீட்டிமுழக்க...

படிச்ச பணக்காரத் திமிருல பேசுறாப்பாருன்னு
நீங்க கழுத்த வெடுக்குனு திருப்ப...

ஆஆமாஆஆ....ஏழப்பொண்ணு சொன்னா
சும்மாவா விட்டுறுவீக...
வக்கத்தவளுக்கு வாய்க்கொழுப்பப்பாருன்னு
சொல்லத்தான் செய்வீக...

பணம் இருக்குன்னு நாக்க தொங்கப்போட்டு வந்துட்டானுங்க...
சுயமா உழைச்சி குடும்பத்த நடத்துற
முதுகெலும்பு இல்லாத பய முதுகுல
மனைவி அந்தஸ்து கெடச்சிசீசீசீ...
சவாரி செய்ய நான் விரும்பல!
மரியாதயா வந்த வழி போயிடுங்கன்னு
காறித்துப்பாத குறையா முகத்த பேத்துரப்போறா...(போறீகளா..)

படிச்ச பணக்காரப்பொண்ணு
நாகரீகமா பேசுவா...பொறந்தவீட்லயிருந்து
நகநட்டு சொத்துபத்து
கொண்டுவருவான்னு பகல்கனவு காணாதீக...
அதிகமா ஆசப்பட்டா அநாகரீக வார்த்தையால
ஈரக்குலைய குத்திருவா ....மறந்துறாதீங்க...(போறீகளா..)

பொண்ணு பார்க்கப் போறது
உங்க குடும்ப விசயமானாலும்
வரதட்சணை விஷத்தைப்
பரப்பாம சமூக அக்கறையோட
யோசிச்சிப் பேசி
பாக்கு வெத்தலை மாத்திப்
பரிசம் போட்டு வாங்க..!

போறீகளா....போறீகளா...
பொண்ணு பா(ர்)க்கப் போறீகளா...
போயிட்டு வாங்க
மூக்கு உடைஞ்சிறாம...
முகங்கிகம் பத்திரம்..!!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.