பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
.
.
அல்குர் ஆன் வழியில் அறிவியல்……………
.
(INTERNAL WAVES IN THE ATMOSPHERE AND OCEAN)
.
(INTERNAL WAVES IN THE ATMOSPHERE AND OCEAN)
அல்லாஹ் இறக்கிய அருள் மறையாம் திருமறை குர்ஆன், ஏராளமான நவீன அறிவியல் உண்மைகளை தன்னகத்தே பொதிந்துள்ளது. மனித இனம் சிந்திக்க சிந்திக்க அவனது ஆய்வறிவுக்கு பாதையமைத்து நேர்வழி காட்டக்கூடிய வசனங்கள் அனேகம் உள்ளது. சிந்திக்கும் மக்களுக்கு நல் வழி காட்டும் ஒரு வசனமே இக்கட்டுரையின் சாரம்.அல்லாஹ் கூறுகிறான்,
ஆழ் கடலிலுள்ள இருள்களைப்போன்றதாகும்; அதனை ஒரு அலை மூடிக்கொள்கிறது; அதற்குமேல் மற்றோர் அலை; அதற்க்கு மேல் மேகம்; (இவ்வாறு) பல இருள்கள்; அதில் சில, சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (இருள்களால் சூழப்பட்ட நிலையில் பார்ப்பவன்)தன் கையை வெளியாக்கி(நீட்டி)னால் அதனை அவனால் பார்க்க முடியாது; இன்னும்,எவருக்கு அல்லாஹ் ஒளியை ஆக்கவில்லையோ அவருக்கு (எங்கும்)ஒளியில்லை.” அல் குர்ஆன்.24:40.
இந்த வசனத்தை வைத்து முன்பே “ஆழ் கடலுக்குள் உருவாகும் உள் அலைகள் (INTERNAL WAVES)”
என்னும் .ஒரு கட்டுரை எழுதியுள்ளோம். அக்கட்டுரையின் தொடர்ச்சியே இக்கட்டுரை.
என்னும் .ஒரு கட்டுரை எழுதியுள்ளோம். அக்கட்டுரையின் தொடர்ச்சியே இக்கட்டுரை.
மேற்க்கண்ட வசனத்தில் அல்லாஹ், மூன்று ஒளி தடுப்பு இருள் நிலைகளை குறிப்பிடுகின்றான்.
1.ஆழ் கடலினுள் ஓரு அலை, 2.கடல் மேற்பரப்பில் ஒரு அலை, 3.வான் மேகம்
முன்பு எழுதிய கட்டுரையில் மேற்பரப்பு அலையையும்,கடலடி அலையையும் மட்டுமே கவனத்தில் கொண்டோம்.அதைப்பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
சூரிய ஒளி பெருங்கடலின் மேற்பரப்பிலிருந்து 15 முதல் 20 மீட்டர் ஆழத்திற்கு கடந்து வருகையில் அந்த ஒளியில் இருக்கும் சிவப்பு நிறம் தண்ணீரில் உட்கொள்ளப்படுகின்றது. ஒரு மனிதன் கடல் மட்டத்திலிருந்து 30 மீட்டர் ஆழத்திற்குச் சென்றபின் அவனுடைய காயங்களிலிருந்து இரத்தம் வழிந்தால் அதை அவனால் பார்க்கக்கூட முடியாது. ஏனென்றால் சிவப்பு நிறம் 30 மீட்டர் ஆழத்திற்கு வருவது கிடையாது. மேலும் அந்த சூரிய ஒளி கடலின் ஆழத்திற்குச் செல்ல செல்ல 30 முதல் 50 மீட்டர் ஆழத்தில் சூரிய ஒளியிலுள்ள ஆரஞ்சு நிறம் உட்கிரகித்துக் கொள்ளப்படுகின்றது.
இரண்டாவது காரணம், ஆழ் கடலின் உள்ளே சுமார் 70 -240 மீட்டர் ஆழத்தில் நீரில் உள்ள வெப்ப நிலை, அடர்த்தி, உப்புத்தன்மைக்கு ஏற்றவாறு, வெவ்வேறு அடர்த்தியுள்ள நீர் ஒன்று சேரும் இடங்களில் ஆழத்தில் பெரும் அலைகள் உருவாகின்றன. இவை சுமார் 100 மீட்டர் பிரமாண்ட உயரமும் (330 அடி) பல நூற்றுக்கணக்கான மைல் நீளத்திலும் நீண்டு செல்லும். கடற்பரப்பில் இவ்வலைகள் (Internal Waves) கண்ணுக்கு தெரியாது. ஆக சூரிய ஒளியானது காற்று ஊடகத்திலிருந்து நீர் ஊடகத்தில் புகும்போது ஆழத்திற்கு தகுந்தாற்போல் (200 மீட்டர்) தனது நிறங்களை இழந்து விடுகிறது. இத்துடன் அங்கு உருவாகும் உள் அலைகளும் (Filter Lens) போன்று செயல்பட்டு ஒளியைத் தடுக்கின்றன.
அல்லாஹ் கூறும் வான் மேக இருள் அலைகள் பற்றி இனி பார்ப்போம்.
ஆழ் கடல் இருட்டாக இருப்பதற்கு மற்றொரு காரணம் சூரிய ஒளி கடலின் ஆழத்திற்குச் செல்லாமல் வானிலேயே தடுக்கும் மேகங்களாகும். சூரியஒளி மேகத்தின் மீது படும்போது 30% அம்மேகத்தினால் தடுக்கப்பட்டு (Scattered) சிதறடிக்கப்படுகின்றது. மீதியுள்ள ஒளியில் 3 ல் 1 பங்கு மேகத்தால் (Absorbed) கிரகிக்கப்படுகிறது. இதனால் மேகத்திற்கு கீழே இலேசான இருள்(நிழல்) ஏற்படுகின்றது. பின்னர் மீதம் உள்ள சூரிய ஒளி, கடலின் மேற்புறமுள்ள அலைகளால் தடுக்கப்படுகிறது. இது இரண்டாவது தடுப்பாகும். இந்த அலைத்தடுப்பை மீறி உட்செல்லும் ஒளியானது கடலின் ஆழத்திற்கு செல்கிறது. அங்கேயும் ஆழ்கடல் அலைகள் இருப்பதால் அவைகளும் தடுப்பாகச் செயல்படுகின்றன.
கடலின் மேற்பரப்பு அலைகளும்,ஆழ் கடலடி உள் அலைகளும், வான் மேகத்தில் உருவாகும் உள் அலைகளும் ஒரே தத்துவத்தில்தான் உருவாகின்றன. இரண்டு அடர்த்தி மாறுபட்ட ஊடகங்கள் சந்திக்கும் இடத்தில் அலைகள் உருவாகின்றன. கடல் மட்டத்தில் உள்ள காற்று ஊடகமும், கடல் மேற்பரப்பு நீர் ஊடகமும் வெவ்வேறு அடர்த்தியில் சந்திக்கும்போது அலைகள் உருவாகின்றன.


தற்போது அதிகம் பேசப்படும் உலகச் சூடேற்றம் (Global Warming ) என்னும் வெப்ப நிலை உயர்வுக்கு வளி மண்டல மேகத்தில் உருவாகும் உள் அலைகளும் காரணமாக இருப்பதாக நவீன ஆய்வுகள் கூறுகின்றன.
Trapped atmospheric waves triggered more weather extremes
https://www.pik-potsdam.de/news/press-releases/trapped-atmospheric-waves-triggered-more-weather-extremes
இரு ஊடகங்கற்கிடையில் வெவ்வேறு அடர்த்தியின் காரணமாக உருவாகும் உள் அலைகள்,(Internal Waves) வானிலும்,கடல் பரப்பிலும்,கடலடியிலும் சூரிய ஒளிக் கதிர்களை தடுக்கும் அறிவியல் உண்மைகளை அல்லாஹ் இவ்வசனத்தில் இறக்கி நம்மை சிந்திக்கச் சொல்கிறான்.ஒளி இல்லையேல் இருள்தான் என்பதை ஆழ் கடல் இருட்டை ஆதாரமாக காட்டுகிறான்.இந்த ஆழ் கடல் இருள்களிலும் நம் கண்ணுக்குத்தெரியாத ஏராளமான உயிரினங்கள் வாழத்தான் செய்கின்றன.
ஆனால் இவைகளினால் என்ன பயன் என்பது நமக்குத்தெரியாது.அல்லாஹ்வே அறிந்தவன். அல்லாஹ்வே ஒளிக்கு ஒளியாக இருக்கின்றான்.அல்லாஹ் யாருக்கு நேர்வழி என்னும் ஒளியை கொடுக்க வில்லையோ அவர்கள் வாழ்வும் ஆழ் கடல் வாழ் பிராணிகளின் இருண்ட உலகமாகவே அமைந்துவிடும்.இஸ்லாம் என்னும் ஒளிமயமான அருள் உலகத்திற்கு அல்லாஹ் மானிடர்களை இச்சிறு வசனம் மூலம் அழைக்கின்றான்.
“ இன்னும்,எவருக்கு அல்லாஹ் ஒளியை ஆக்கவில்லையோ அவருக்கு (எங்கும்)ஒளியில்லை.” அல் குர்ஆன்.24:40.
அல்லாஹ்தான் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப் பாதை)௦யின் பால் நடத்திச் செல்கிறான்.மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.” அல் குர்ஆன்.24:35.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.