புதியவை

05. காற்றைப் படைத்தது (இஸ்லாமிய பார்வையில் உலகம்) - மிஹிந்தலை ஏ.பாரிஸ்


படைப்புக்களில்
முக்கிய படைப்பு காற்று!
அது உலகின் மூச்சு
உயிர்களின் சுவாசம்
உலகின் உயிர் நாடி!

உயிர் வாழ வேண்டுமானால் 
காற்றின் கைகள்
சுவாசப்பை தழுவ வேண்டும்
காற்று இருந்தால் மட்டுமே
இதயம் குருதியை
உள்ளே இழுத்து
உடல் முழுவதும் செலுத்தும்

காற்று என்பது
உலக வெளி முழுவதும்
பறந்து பறந்து திரிந்து
உலகையே முத்தமிடும்
கண்ணில் படாத காதலி

அது இதயத்திற்கு
இரை போடும் எஜமான்
ஓயாமல் உழைத்துக்கொட்டும்
ஒரு கொடையாளி!
புலன்களால் துழாவியும்
தென்படாத ஒரு நுண்ணுயிர்!

காற்றைப்பற்றி
காரணங்கள் பல கூறி
வித்தைகள் தோற்றி வித்து
அதனை மொழியாக்கம் செய்து
அழகிய தத்துவங்களை
அள்ளி விதைத்தாலும்
வல்ல அல்லாஹ்வைத் தவிர
விஞ்ஞானிக்கும் விளக்கம் தெரியாது!

விஞ்ஞாக யுகம்
விபரிக்கும் கோணம்
பல விதமானாலும்
அதன் அந்தரங்கம் முழுவதும்
அல்லாஹ் மட்டுமே அறிவான்!

இறைவன் காற்றைப்படைத்தான்
அதன் அங்கம் முழுவதும்
பல சிறகுகளை
பலத்தோடு பொருத்தி வைத்தான்
ஓயாமல் சிறகடிக்கும்
உந்து சக்தியை கொடுத்தான்!

பின் காற்றை அழைத்தான்
காற்று கை கூப்பி
இறைவனை போற்றி துதித்தது!
உடன் காற்றுக்கு ஏவினான்
தண்ணீரை காவும் படியும்
தன் கூற்றை மட்டும்
தரணியில் நிறைவேற்றும் படியும்!

அல்லாஹ்வின் ஏவலை
உடனே ஏந்திய காற்று
தண்ணீரை கௌவிக்கொண்டது
பின் தண்ணீருக்கு மேல்
அர்ஷ் உயர்ந்தது
தண்ணீர் காற்றின் மேலாகி விட்டது 
முழுவதும் அவனே உணர்வான்
அவன் புகழே அனைத்தும்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.