புதியவை

இளைஞனே - ஓட்டமாவடி றியாஸ்


வாழ்க்கையை வாழடா,
வாழ்ந்து நீ பாருடா..!!
தடைகள் ஏதடா,
தள்ளி போகாதடா..!!
தேடல்கள் சுகமடா,
தேடித்தான் பாரடா...!
ஓடும் நதியடா,
ஓடிப் பாயும் வேங்கையடா..!!
பாயும் வெள்ளமடா,
பாய் மரக் கப்பலடா..!!
இளமையோ நெருப்படா,
இரத்தமோ துடிப்படா..!!
காதலோ கானலடா,
கலை பயில முடியாதடா..!
காலமோ பொன்னடா,
கரைந்து விடுமடா...!!
கல்வியே காலமடா,
கருத்தினில் வையடா..!!
உமக்கு ஏன் வெட்கமடா,
உள்ளத்தில் ஏன் அச்சமடா..!!
வறுமையை விரட்டடா,
வரம்பு மீறாதடா..!!
கைத் தொழில் பயிலடா,
கை வரிசை காட்டுடா..!!
களத்தில் இறங்கடா,
களையை பிடுங்கடா...!!
உறக்கமே போதுமடா
உலகத்தை வெல்லுடா..!!
உறவை மதியடா,
உயர்ந்து செல்லடா..!!
இறைவன் ஒருவனடா,
இறையச்சம் வேணுமடா..!!
வணக்கமே வாசலடா,
வழி மறக்கக் கூடாதடா..!!
தந்தவன் இறைவனடா,
தலைக்கனம் ஏனடா..!!
நாளே நமதடா,
நம்பி நடவேடா..!!
வாழ்கையை வாழடா,
வாழ்ந்து நீ உயரடா..!!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.