புதியவை

எதிர் முனை - கூர்மை - கற்குவேல் . பா


மழைத் துளிகளை பெற்று எடுக்க ..
மேகங்கள் ஒன்றாய் கூடி வேகமாய் , 
இனப்பெருக்கம் செய்து கொண்டிருந்த வேளையில் ..
தனது வெப்பம் தாங்காமல் தனியே ..
ஆளில்லா பாலை வனம் ஒன்றில் ,
வெப்பத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது சூரியன் ..!!!
காற்றின் ஈரப்பதம் ஏற்க இயலா ..
காரிகை ஒருத்தி தனது காதினை ,
பஞ்சினால் அடைத்துக் கொண்டிருந்த வேளையில் ..
பனிப் பிரதேச வான்வெளி ஒன்றில் ..
பனிக் காற்றினை கிழித்துக் கொண்டு ,
பறந்து கொண்டிருந்தது ஒரு பறவை ..!!!
உயிர் பிரியும் தருணம் ஒன்றில் ..
உயிர்வாயு ஏற்க இயலாமல் ஒருவன் ,
செயற்கை வாயு உட்கொண்டிருந்த வேளையில் ..
காற்றுத் துகள்கள் ஒன்று கூடி ..
உயிர்களை எல்லாம் அழித்து ஒழிக்க ,
உரு எடுத்துக் கொண்டிருந்தது புயலாக ..!!!
மதுக் கோப்பை ஒன்றை நிரப்ப ..
குளிர் பெட்டியில் வெப்பம் குறைத்து ,
பனிக்கட்டி உருவாகிக் கொண்டிருந்த வேளையில் ..
வெப்பக் காற்றின் வேதனை தாங்காமல் ..
பனிப் பாறைகளை பாரபட்சம் பாராமல் ,
உடைத்து எறிந்து கொண்டிருந்தது இயற்கை ..!!!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.