அவுஸ்திரேலிய இருபதுக்கு இருபது அணியின் தலைவரும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான ஆரொன் ஃபின்ச், பந்தொன்று அவரது நெஞ்சுப் பகுதியைத் தாக்கியதன் காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஐ.பி.எல் தொடரில் ஏற்பட்ட உபாதைக்குப் பின்னர் அவர் பங்குபற்றிய முதலாவது போட்டியாக, யோர்க்ஷையர் பிராந்திய அணியின், இரண்டாம் நிலை அணிக்காகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போது, அவர் அடிக்க முனைந்த பந்து துடுப்பில் பட்டு, அவரது நெஞ்சுப் பகுதியைத் தாக்கியது. அதன்போது அவர் இரத்தத்தை வாயால் வெளியிட்டதோடு, கடுமையான வலிக்கு உள்ளானார். இதன் காரணமாக அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, பின்னர் வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவுஸ்திரேலியாவின் மற்றொரு வீரரான மொய்ஸஸ் ஹென்றிக்கஸ், அண்மையில் இங்கிலாந்தின் பிராந்திய அணியான சரே அணிக்காக விளையாடும் போது, மற்றொரு வீரருடன் மோதியதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டியேற்பட்டமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/148995#sthash.4YqYE4gi.dpuf
Menu
பிரபலமான பதிவுகள்
-
முதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தி யாவைச் சேர்ந்த இராச. கிருட்டினன், உலகம் தழ...
-
நீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய்! Asifa சிறுமிகளை தாக்கும் நாசக் கிறுமிகளே, சிறுநீர் அருந்துங்கள் குடிநீர் எதற்...
-
தடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...
-
எங்களுடன் ஒன்றாக வேலைபார்த்தவர் ஜெயராமசர்மா ஐயா அவர்கள். பஸ்ஸிலே ஒன்றாகவே பாடசாலைகளுக்குப் போய்வருவருவோம். சிலவேளை சைக்கிளிலும்...
-
நாகரிகம் --------------------- அங்கங்கள் அனைத்தும் இறுக்கிப் பிடித்து பாங்கான பருவம் திமிறிக் கொண்டு ஆண்களின் கண்கள் ...

பின்சின் நெஞ்சில் பந்து தாக்கியது
அவுஸ்திரேலிய இருபதுக்கு இருபது அணியின் தலைவரும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான ஆரொன் ஃபின்ச், பந்தொன்று அவரது நெஞ்சுப் பகுதியைத் தாக்கியதன் காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஐ.பி.எல் தொடரில் ஏற்பட்ட உபாதைக்குப் பின்னர் அவர் பங்குபற்றிய முதலாவது போட்டியாக, யோர்க்ஷையர் பிராந்திய அணியின், இரண்டாம் நிலை அணிக்காகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போது, அவர் அடிக்க முனைந்த பந்து துடுப்பில் பட்டு, அவரது நெஞ்சுப் பகுதியைத் தாக்கியது. அதன்போது அவர் இரத்தத்தை வாயால் வெளியிட்டதோடு, கடுமையான வலிக்கு உள்ளானார். இதன் காரணமாக அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, பின்னர் வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவுஸ்திரேலியாவின் மற்றொரு வீரரான மொய்ஸஸ் ஹென்றிக்கஸ், அண்மையில் இங்கிலாந்தின் பிராந்திய அணியான சரே அணிக்காக விளையாடும் போது, மற்றொரு வீரருடன் மோதியதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டியேற்பட்டமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/148995#sthash.4YqYE4gi.dpuf
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.