புதியவை

அகிலத்தின் அருட்கொடை - ஜின்னாஹ்


நெருப்பு மணலில் ஞானமற்ற பெருவெளியில்
ஒரு குளிரூற்றை.
ஞானச்சுரங்கத்தை.
நாயன் படைத்தளித்தான்.
பூவுக்குள் பொதிந்த புதுத்தேன்போல்ää
மாசற்றää
ஞானம் அவர்கள்தம் நெஞ்சுள் நிரம்பியது.
அள்ளியள்ளிப் பருகிடினும்
அற்பமெனுங் குன்றாதää
அமுதசுரபியது.
ஸம்ஸம்போல் அமுதசுரபியது.
கல்லுக்குள் ஈரம்
கசியவைக்கும் அல்லாஹ்
கல்லாத நபிநெஞ்சுள்
அறிவை
கொட்டிவைத்தான் புதுமையில்லை.
ஞானப் பிழம்பன்றோ நபிபெருமான்.
உம்மியென்ற பேர்நபிக்கு ஒத்துவரா!
பூமி அவர்கள்தம்
பூவுடலைக் காணுமுன்னர்
ஞானத்தில் தோய்த்தெடுத்தே
நானிலத்தின் அருட்கொடையாய்
அல்லாஹ் அருளி
அவன்மறையில் நிரூபித்தான்.
பொறுமையென்னும் பண்பின்
பெட்டகமே எம்மான்தான்.
பொறுமைக்குக் கூலி
பகர்தற்கு அரியதென
புகன்றார்கள்.
மட்டிலுமா?
அதனைச்
செய்கையிலுங்காட்டிச்
சிறப்புற்றார் எம்பெருமான்.
விட்டுக் கொடுத்தால் வெற்றியுண்டு என்பதனை
வாழ்வியலில் காட்டி
வெற்றிவாகை சூடியவர்.
காபீர்களோடு
காருண்ய நபிகொண்ட
“ஹ{தைபிய்யா” உடன்படிக்கை
காலத்தின் பதிவாகும்.
மக்காவின் வெற்றிக்கு
வித்திட்ட நிகழ்வாகும்.
ஹ{தைபிய்யா ஒப்பந்தம்
காபீர்கள் பக்கந்தான்
சார்ந்திருந்ததாகும். சரித்திரம் கூறுவது.
ஈற்றில்
எண்ணற்றோர் இஸ்லாத்தில்
இணைவதற்கு காரணமாய்
விண்ணவன் ஆக்கிவைத்த
விபரத்தை நாமறிவோம்.
ஊலகமெலாமம் இன்று உயிரழிவே
காரணமாய்
ஒன்றிரண்டே தானுண்டு.
தம்மைப்போல்ää
பிறர்வாழ வேண்டுமெனுந்
தார்மீகம் அற்றதுவும்
விட்டுக்கொடுக்கும்
வாய்ப்பளிக்க மறுப்பதுவும்.
இரண்டாகும்.
உலகில்
சமாதானந்தோன்றிச்
சத்தியம் வெல்லவெனில்
பெருமானார் வாழ்வொன்றே
படிப்பினையாய் அமைவுபெறும்.
வேற்மைக்குள் ஒற்றுiமையை
வளர்த்தவர்கள் எம்பெருமான்;
சொர்க்கத்துக் கருங்கல்லை
கஃபாவில் பதிப்பதிலே
சர்ச்சை.
குலப்பெருமை கூறிக்
கொதித்தார்கள் அரேபியர்கள்.
மேலாடை தனைவிரித்து
மலர்க்கரத்தால் கல்வைத்து
மூலைக்கு ஒருவரென
முடுகியதைத் தூக்கவைத்து
கல்லைப் பதித்து
கூட்டுறவைக் காட்டியவர்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.