புதியவை

சமூக வடிவங்கள் - கற்குவேல் .பா


உயர் வகுப்பு
பலகாரக் கடை .. 
உள் எங்கும்
வண்ண இனிப்புகள் ..
சொகுசு வண்டியில்
தாயுடன் வந்தே
வாங்கி சுவைத்தது
பணம் படைத்தவரின் - பணக்கார
குழந்தை ஒன்று ..
சுவைக்க நாவிருந்தும்
வாங்க பணமின்றி
கண்ணாடி வழியே
உற்று நோக்கியிருந்தது - ஏழை
குழந்தை ஒன்று ..
வாங்க பணமிருந்தும்
சுவைக்க நாவிருந்தும்
உள்ளே அனுமதிக்கப்படாமல்
வெளியே நின்றது - தாழ்த்தப்பட்டவரின்
குழந்தை ஒன்று ..
இனிப்புகளில் மட்டுமே
வண்ணம் இங்கில்லை ..
இவர்களின் மனங்களிலும்
சமூக வடிவங்களிலும்
நிசப்தமாக .....!!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.