புதியவை

ஒரு கவிதையின் பேருந்துப் பயணம் - ரேணுகா சுந்தரம்


ஆயத்தமாகாத ஓர் அவசர சந்தர்ப்பத்தில்
ஆழ்ந்த யோசனையுடன்
பயணித்துகொண்டிருந்தேன் ஓர் பேருந்தில்;
கருத்தில் அடங்காத கற்பனைகளுடனும்
இதயம் கொள்ளாத எழுத்துகளுடனும்;
எண்ணங்களை வண்ணக்கோலங்களாக்கும்
எழுதுகோலின்றியும் அது உதிர்க்கும் சொற்குவியலை
சுகமான சுமைகளாய் தாங்கும் தாள்களின்றியும்;
எதுவுமே இல்லாவிட்டாலும் எதையும் சாதிக்கும் அறிவு
அடுத்தடுத்து சொற்களை கொட்டி குவித்துக்கொண்டிருந்தது;
உள்ளறிவு எழுதுகோலாய் மாறி
வரைந்தபடி விரைந்துக்கொண்டிருந்த்து
புரட்ட தேவையில்லாத இதயத்தாள்களில்
கலைத்தழிக்க இயலாத கவியோவியங்களை;
எத்தனை காட்சிகள் எத்தனை மனிதர்கள்
எத்தனை உணர்வுகள் எத்தனை கனவுகள்;
எழுத எழுத குறையாமல் நிரம்பி தளும்பின
பூரண விருந்துண்டபக்கங்கள்;
பயண தூரம் முடிந்து இறங்கிவிட்டேன் சொற்ப நேரத்தில்;
இறங்காமாலேயே தொடர்ந்து கொண்டிருக்கின்றன
தம் பயணத்தை; என்னை தனியே இறக்கி விட்ட
என் எழுதுகோலும் எண்ணற்ற வெற்றுத்தாள்களும்!!!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.