புதியவை

சதம் விளாசிய கவுஷால் சில்வா: இலங்கை அணி அசத்தல்


பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கவுஷால் சில்வா சதம் விளாசினார்.
இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நடக்கிறது.
முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்தானது. நேற்று 2ம் நாள் ஆட்டம் நடந்தது. நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா, களத்தடுப்பை தெரிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் கருணாரத்னே (21) ஏமாற்றினார்.
பின் ஜோடி சேர்ந்த கவுஷால் சில்வா, சங்கக்காரா ஜோடி சிறப்பாக விளையாடியது.
அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய சங்கக்காரா, டெஸ்ட் அரங்கில் தனது 52வது அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் அசத்திய கவுஷால் சில்வா தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார்.
சங்கக்காரா 50 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து வந்த லகிரு திரிமான்னே (8) நிலைக்கவில்லை.
முதல் இன்னிங்சில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்கு 178 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சமின்மை காணமாக 2ம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது.
சில்வா (80), அணித்தலைவர் மேத்யூஸ் (10) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் வாஹாப் ரியாஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இந்நிலையில் 3வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய சில்வா டெஸ்ட் அரங்கில் 2வது சதத்தை பதிவு செய்தார். மேத்யூஸ் (19), சந்திமால் (23), கிருத்துவன் வித்தன்ஏஜ் (18) வரிசையாக நடையை கட்டினர்.
93 ஓவர்கள் முடிந்த நிலையில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 266 ஓட்டங்கள் எடுத்துள்ளது. டில்ருவன் பெரேரா (5), சில்வா (112) ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.