புதியவை

நீ என் ஊனுறைந்த உயிரன்றோ - லுனுகல ஸ்ரீ


நீ இல்லா இந்த நிலவுப் பொழுதென்றன்
மீதினில் போகுதடி மின்னலாய்த்-- தீப்பொரிந்து
ஆவி இனிக்க அனிச்சைமொழி செய்யுமென்
ஓவியம் உன்னை நினைந்து.
கூன்பிறை நெற்றி குனிந்த புருவங்கள்
மான்விழி ரெண்டு மலர்கையில் -- தேன்தடவி
ஊனுறையும் உன்திரு நோக்கும், உயிர்கசிந்து
நானிருக்கும் உன்நன் நெஞ்சு...
குளிர்மொழியும் கொவ்வைஇதழ், கொஞ்சம் தொடநான்
கிளிர்தெழும் நாணச் சிதறள் --மிளிரும்
கனிக்கன்னங் கள்:மென் மலர்கைகள் எல்லாம்
எனதான உன்றன் எழில்..
நீர்கிழிக்கும் வாலளவு நேர பிரிவிற்கே
நீர்மல்கி நிற்பாயே நெஞ்சேஎன் -- மார்பணைத்து
கோடைகள் மூன்று குதித்தோடி போயினவே
பேடுனைநான் விட்டுப் பிரிந்து...

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.