புதியவை

இலை உதிர்த்த மரம் - ராஜகவி ராஹில்


கனவுகள்
குவிந்து
கிடக்கின்றன 
சலவைக் கற்களாக
நீ வேண்டும்
தாஜ்மகால் கட்டுவதற்கு !
நான்
வள்ளுவன் ஆகுவேன்
எனக்கான
திருக்குறளை
மூன்று சொற்களில்
நீ சொன்னால் !
என் நினைவுகள்
சிறகுகள்
பறந்து கொண்டிருக்கிறேன்
நான்
தூரச் செல்கிறாய் நீ
கிரகமாகியபடி !
என்
செல்லம்மாபோல்
நீ
இல்லை என்பான்
பாரதியும்
உன் மெளனத்தை
கவியாக்க முடியாமல் !
முள்ளை
பூ என்றுதான்
சொல்லுகிறேன்
அது
எத்தனை முறை
தைத்தாலும் !
நான்
வந்து நின்ற போது
அறிந்தேன்
உன் முற்றத்திற்கும்
கண்கள்
இல்லைஎன்று !
என் வானம்
முப்பது நாட்களும்
அமாவாசைதான் என்று
தீர்மானித்த
நிலா
நீயேதான்!
என் அறை
இருண்டுதான்
இருக்கிறது
மின் குமிழ்கள்
எரிந்தபோதும்!
ஆகாயத்தில்
வயல் செய்ய
ஆசைப்படுகிறேன் நான்
என் நிலமாக
நீ
கிடைக்காததால் !
கடலுக்குள்
தேடி
அலைகிறேன்
என்
மூச்சையும்
முத்தையும் !
சுவாசிக்காத
புல்லாங்குழல் நான்
உயிர் பெறுவேன்
காற்றாக
நீ வந்து
புகுந்தால்!
உன் பெயரை
மீண்டு
மீண்டும்
உச்சரிக்கிறேன்
உன்னோடு
உரையாட
முடியாததால் !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.