புதியவை

ஜனாதிபதி தேர்தல் அன்று இரவு அலரி மாளி்கையில் இடம்பெறவிருந்த சூழ்ச்சி! முன்னாள் இராணுவ தளபதியின் விளக்கம்


கடந்த ஜனாதிபதி தேர்தல் அன்று இரவு அலரி மாளி்கையில் இடம்பெறவிருந்த சூழ்ச்சி குறித்து முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க கருத்து வெளியிட்டுள்ளார்.
தனியார் தொலைகாட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் குறித்த சூழ்ச்சி பற்றி குறிப்பிட்டுள்ளார்.
சூழ்ச்சி இடம்பெறவிருந்ததாக கூறப்பட்ட சந்தர்ப்பத்தில் நான் அலரி மாளிகையில் இருந்தேன். சமூகத்தை குறித்தும் நாட்டை குறித்தும் மிகவும் அக்கறையுடைய ஒரு அதிகாரி என்ற ரீதியில் நான் அவ்விடத்தில் இருந்தது நாட்டுக்கும் சமூகத்திற்கும் மிகவும் ஒரு நல்ல விடயமாகும்.
நான் அப்படி சொல்வதற்கு காரணம் குறித்த சந்தர்ப்பத்தில் எங்களுடைய பங்களிப்பு காணப்பட்டது மிகவும் அழகான முறையில் வரலாற்றில் இல்லாத வகையில் சுமூகமான அதிகார மாற்றமே இடம்பெற்றுள்ளது.
உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இந்நாட்டு இராணுவத்தினரே ஜனநாயகத்தை பாதுகாக்கின்றனர். இவ்வாறான ஒரு நிலையில் இராணுவத்தினரால் சூழ்ச்சி இடம்பெற்றதாக கூறப்படுவதனை குறித்து இராணுவத்தின் முன்னாள் உயர் அதிகாரி என்ற வகையில் நான் மிகவும் வருத்தமடைகின்றேன்.
தேர்தல் முடிவுகள் வெளியாகிய அன்று அதிகாலை இத்தரப்பினர் தோல்வியடைந்தால் இராணுவத்தினரை பயன்படுத்தி மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான சூழ்ச்சிகள் இடம்பெறும் என பலர் குறிப்பிட்டிருந்தார்கள்.
இவ்வாறான சூழ்ச்சிகள் பல்வேறு நாடுகளில் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் காணப்படுகின்றது எனினும் இலங்கை போன்ற ஒரு நாட்டில் அன்றைய தினம் எவ்வித சூழ்ச்சியும் இடம்பெறவில்லை.இன்றைய தினமும் இடம்பெறவில்லை, நானைய தினமும் இடம்பெறாது.
மிகவும் நம்பிக்கையுடன் இதனை தெரிவிக்கலாம் ஏன் என்றால், அவ்வளவு ஒழுக்கமுடைய இராணுவத்தினரே இந்நாட்டில் உள்ளனர். அலரி மாளிகையில் சூழ்ச்சி இடம்பெற்றதாக கூறப்பட்ட அன்று பாதுகாப்பு செயலாளர் உட்பட பாதுகாப்பு சபையின் அனைவரும் அங்கிருந்தார்கள்.
இதற்கு முன்னர் பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாதுகாப்பு சபையினர் அவ்வாறு இருந்தார்களா என்பது குறித்து எனக்கு தெரியாது. அன்றைய தினம் நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று இடம்பெறுகின்றது ஏதேனும் குழப்பநிலை தோன்ற வாய்ப்புகள் காணப்படும் எனவே அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் அனைவரதும் பாதுகாப்பின் அவசியத்தை கருதியே பாதுகாப்பு படையினர் அங்கிருந்தார்கள்.
முப்படையினர், இராணுவத்தினர், பொலிஸார், பாதுகாப்பு செயலாளர் என அனைவரும் அங்கிருந்தார்கள். இதன் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் எனக்கு தோல்வியும் ஒன்று தான் வெற்றியும் ஒன்று தான் என எதனையும் ஏற்றுக்கொள்ளும் மன நிலைமையிலே இருந்தார்.
இதேபோன்று வெற்றி பெற்ற குழுவினரால் அலரி மாளிகையை சுற்றி வளைத்து ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்த கூடும் என்ற நம்பிக்கையும் காணப்பட்டது. இல்லை அவ்வாறான ஒரு நிலை உருவாகுவதற்கு இடமளிக்க மாட்டோம், நாட்டில் மிகவும் அமைதியான சூழ்நிலையே காணப்படுகின்றதென குறித்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு படையில் அனைவரும் தெரிவித்தோம்.
இதேவேளை குறித்த சந்தர்ப்பத்தில் இராணுவத்தினர் நாட்டை சூழ்ச்சி மூலம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றார்கள் என பல்வேறான தகவல்கள் தொலைபேசிகளிலும் குறுந்தகவல் ஊடாகவும் பரிமாற்றப்பட்டது.
எனவே மக்களின் ஆதரவிற்கு தலைவணங்கும் வகையில், நாட்டின் ஆட்சியை பரிமாற்றிக்கொள்வதற்கான சந்தர்ப்பம் இதுவென தற்போதைய பிரதமரை அழைத்து இப்பிரச்சாரத்தை ஊடகத்திற்கு அறிவிப்போம் என ஜனாதிபதி செயலாளரிடம் தெரிவித்ததும் நாங்களே.
அவ்வாறான பிரச்சாரம் ஒன்றும் ஊடகங்களில் இடம்பெற்றது. இதனை தவிர அன்றைய தினம் எவ்வித சூழ்ச்சிகளும் இடம்பெறவில்லை என முன்னாள் இராணுவ தளபதி தயர் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.