புதியவை

அமைச்சர் ஹக்கீம் அவர்கள் கொக்கரிப்பதற்கான காரணம் தான் என்ன?


இனவதத்தை கையிலெடுத்து சமுகத்தை மாட்டிவிடும் திட்டமா?
மஹிந்தவின் ஆட்சியில் ஒரு பன்னீர்செல்வமாக இருந்த தலைவர் ரவூப் ஹக்கீம், மைத்திரி-ரணில் ஆட்சியில் மட்டும் அரவிந்த் கெஜ்ரிவால் வேடமிடுவது நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதவேண்டியுள்ளது.
18 வது திருத்தச்சட்டம் என்ற நரகக்கிடங்கில் விழுந்தபோது எந்தவொரு பொதுமகனிடமோ அல்லது தொண்டனிடமோ அனுமதி கேட்காது சமுகத்துக்கு எதிராக தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து சமுகத்தை அதனுள்ளே பிடித்துத் தள்ளிய சாணக்கிய தலமை இன்று இந்த நல்லாட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மிக மிகப் பிரதானமாக முன்வைக்கப்பட்ட தொகுதிவாரித் தேர்தல் முறை அதாவது 20 வது திருத்தச்சட்டத்துக்கு எமது ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகமும் அங்கீகாரம் வழங்கி வாக்களித்து தமக்கான ஆட்சியையும் நிலைநாட்டியிருக்கும் வேளையில் மக்களின் அங்கீகாரத்துக்கு மாற்றமாக அமைச்சர் ஹக்கீம் அவர்கள் கொக்கரிப்பதற்கான காரணமதான் என்ன? சமுகத்தை கோழைகளாக்கி தனக்கு மண்டியிடச் செய்யும் கைங்காரியமா? அல்லது இனவதத்தை கைய்யிலெடுத்து சமுகத்தை மாட்டிவிடும் திட்டமா? நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் தலைவரே........ மக்களுக்காக அரசியலே தவிர  அரசியலுக்காக மக்களில்லை என்ற விதியை புரிந்து கொண்டு மக்களின் ஆணைக்கு கட்டுப்பட்டு தூய்மையான தலைமைத்துவத்தை சீராக கொண்டு செல்வதே உங்களைபோன்ற தலைவர்களுக்கு இருக்க வேண்டிய சீரிய பண்பு, இதைவிடுத்து மக்களை கட்டிவைத்து காவடியாட நினைப்பது கபடத்தனம். நீங்கள் இப்படியே தொடர முற்பட்டீர்களேயானால் ராஜித மட்டுமல்ல நாளை தம்பானையில் இருப்பவன் கூட உங்களை கிண்டல் செய்வான்.

மேலும், இதில் வேடிக்கை என்னவென்றால் முஸ்லிம் காங்கிரசின் போராளிகள் என்ற போர்வையில் முகனூல் வழியாக தலைவர் செய்வதுதான் சரி என்று நூல்விடும் சில கூஜா தூக்கிகளின் நடவடிக்கைகள் வேதனையை தருகிறது. மக்களே ஆணை வழங்கிய திட்டத்தை முன்னெடுத்து செல்வதுதானே முறை அதைவிடுத்து நாமே அதற்கு தடையாகவிருந்தால் நாம் குழப்பம் அடைந்த சமுகம் என்ற இழிசொல்லுக்குள் அகப்பட்டுவிடுவோமல்லவா????

சமுகமே..... சிந்தியுங்கள் சிந்தியுங்கள். உங்கள் தலைமயையும் சிந்திக்கச் செய்யுங்கள்.

நன்றிகள் தமிழ் மிர்றோர் 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.