புதியவை

06. அர்ஷை சுமக்கும் மலக்குள் படைத்தது (இஸ்லாமிய பார்வையில் உலகம்) - மிஹிந்தலை ஏ.பாரிஸ்


அர்ஷ் என்னும்
இறைவனுக்குரிய அந்த புனிதத்தை
சுமந்து பாதுகாக்கும் படி
நான்கு மலக்குகளை படைத்தான்

மலக்குகள் என்பவர்கள்
முக்கிய படைப்பினம்
அவர்கள் ஒளியில்
எழில் வீசும் பூக்கள்
ஓயாமல் சேவை செய்து
காற்றைப்போன்று கண்ணில் படாமல்
இறைவன் ஏவல் நிறைவேற்றும்
இறைவனின் அமரர்கள் என்று
அழைக்கப்படும் ஒரு உயர் பிரிவினர்....
அவர்களை வானவர் என்றும்
அழைக்கப்படுகின்றனர்!

அர்ஷின் பாதுகாவலர்கள்
நான்கு மலக்குகள்...
அவர்களின் வலிமைகள்
வார்த்தையில் அகப்படாது...!
அடங்கியும் விடாது
அவர்கள் ஒவ்வொருவருக்கும்
ஸ{றத்துக்கள் உள்ளன!

ஸுறத்துக்கள் என்பது என்ன...?
அவை திருமறை அத்தியாயங்கள்...!
முதல் மனிதர் ஆதம் துவக்கம்
இறுதி மனிதர் எவரோ
அவர் வரை நிலைக்கும்
;இறைவன் அருளிய சரத்துக்கள்!

ஸுறாக்களை ஏன் அருளினான்...?
குர் ஆனை ஏன் இறக்கினான்....?
அது மனிதனின் பாடப்புத்தகம்
அதன் பாட விதைகளை
உள்ளங்களில் விதைத்துக் கொண்டு
உலகில் வாழ்ந்து வந்தால்
ஈருலகிலும் நன்மைகளை மடடும்
 உயர்  அறுவடைகளை கொடுக்கும்
இறைவனின் ஓர் விதை!

அவ்வாறுதான் மலக்குகளுக்கும்
ஸுறாக்கள் உண்டு
அதன் படி நின்று வணங்குவார்கள்...!
அவர்கள் மனிதர்கள் இல்லை
மனிதனில் இருந்து வேறுபட்டவர்கள்
மாறு செய்யமாட்டார்கள்...
மறுமையிலும் நிலைப்பவர்கள்!

அவர்கள் ஸுறாக்களை ஒதினால்
உடன் அவை அமுலாக்கப்படும்
துஆக்கள் கேட்டால்
அதாவது பிராத்தனை செய்தால்
இறைவன் கொடுத்து விடுவான்
இல்லையேல் அவனும் கடனாளியாவான்!
இறைவனையே கடன்காரனாக மற்றும்
அவர்களின் வலிமை
அவர்களுககு மட்டுமே நிகராகும்
எவரையும் இன்மையிலோ மறுமையிலோ
அவர்களை ஒப்பிட இயலாது!

கியாமத்து நாளில்
அதாவது
உலகம் முழுவதும் அழிக்கப்பட்டு
அதற்கு பின் மீண்டும்
உயிர் கொடுக்கப்பட்டு
உலக வாழ்க்iயின் 
விபரக்கோப்புக்கள் விரிக்கப்பட்டு
கேள்விக்கணக்குகளும்
அதன் வழக்குகள் தொடுக்கப்பட்டு
சொர்க்கம் நரகம் 
பிரிக்கப்படும் ஒரு நாள்!

அந்த பொன்னான நாளில்
இன்னும் நான்கு மலக்குகளால்
முன்னைய நான்கு பேருக்கும்
உதவிகள் புரியும் படி
இறைவன் உத்தரவு பிறப்பிப்பான்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.