புதியவை

ஆர்.கே.நகர் சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதா அமோக வெற்றிசட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலில் ஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா 1,50,722 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன், சுயேட்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட ஏனைய வேட்பாளர்கள் அனைவரும் கட்டுப்பணத்தை இழந்தனர்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27 ஆம் திகதி நடைபெற்றது.
இதில் 74.4 சதவீத வாக்குகள் பதிவாகின. 181 ஆவது வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளில் குழப்பம் ஏற்பட்டதால், அங்கு மட்டும் நேற்று (திங்கள்கிழமை) மறு வாக்குப்பதிவு இடம்பெற்றது.
இந்நிலையில், இன்று காலை 8 மணியளவில் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து அனைத்துச் சுற்றுகளிலும் அதிமுக முன்னிலை வகித்தது.
இறுதிச் சுற்று முடிவில், ஜெயலலிதா (அதிமுக) – 1,60,432 வாக்குகளும், மகேந்திரன் (இ.கம்யூ.) – 9,710 வாக்குகளும், டிராபிக் ராமசாமி – 4590 வாக்குகளும் பெற்றனர்.
அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரனை 1,50,722 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.
தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து ஜெயலலிதா இன்று மாலையே சபாநாயகர் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.