புதியவை

நேன்பின் மாண்பு - ஜின்னாஹ்


உண்ணாதும் பருகாதும் ஒருதிங்கள் பகலினில்
உபவாசந் தனைத்தொடர்வோம்
உண்ணவும் பருகவும் உவந்தளிப் போன்றனை
உறங்காது வணங்கி வருவோம்
பசியதன் கொடுமையைப் புரிந்திட நோன்பினைப்
பக்குவ மாக நோற்போம்
பசித்தவர் தமக்குமே பங்கிட்டளித்திடும்
பண்பினை வளர்த்தெடுப்போம்
பச்சிளம் பருவத் தேயிருந் திறைவனின்
பணிப்பினைச் சிரசு தாங்கப்
பழக்குவோம் எங்களது பிள்ளைகள் தம்மையும்
பசியறிந் திடவுஞ் செய்வோம்
உடலினைத் தூய்மைப் படுத்திடும் மருந்ததாம்
உபவாசம் நீங்கள் அறிவீர்
உளத்தினைப் உயர்பண்பின் உறைவிட மாக்கிடும்
ஓர்வீரே நோன்பிருப்பீர்
பாவங்கள் செய்திடும் பேதமை ஒழிந்திடும்
படைத்தவன் பேரருள் பொலியும்
நாவொடு கண்களும் செவிப்புலன் றானுமே
நன்மையின் பக்கல் நிலைக்கும்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.