புதியவை

வெளி நாட்டில் உள்ள திறமைசாலிகளை தாய் நாட்டுக்கு திருப்பி அழைப்போம்


பெரும் பாலான அரசியல் வாதிகள் தங்களது இடத்தை அரசியலில் தக்க வைத்துக் கொள்ளும் நோக்குடன் தான் தீவீரமாக செயல் பட்டுக் கொண்டு இருக்கிறார் களே தவிர நம் நாட்டை பல காரணிகள்  மறை முகமாக அழித்துக் கொண்டிருக்கும் விடயங்களை நோக்குவதுக்கோ அல்லது அதை தீர்த்து  வைப்பதுக்கோ அல்லது தீர்வு களை கான்பதுக்கோ முயலவில்லை என்பதை நாம் அறிய வேண்டும்
உலகின் முன்னணித் தயாரிப்புகள் அனைத்தும் தம் நிறுவனங்களை இலங்கையில் நிறுவத் துடிக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் வற்றாத மிக அற்புதமான அறிவாற்றலுடன் சிந்தித்து உழைக்கக் கூடிய மனிதவளம் இங்கு உண்டு.

மேற்கத்திய நாடுகள் அறிவியல் விஞ்ஞான ரீதியில் சரிவைச் சந்தித்தனவா என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.வற்றாத மனித வளத்தை அவர்கள் இறக்குமதி செய்கின்றனர். கண்ணுக்குத் தெரியாமல் நாம் ஏற்றுமதி செய்கிறோம். அமெரிக்கா போன்ற நாடுகள் உலகில் எங்கெல்லாம் திறமைசாலிகள் உள்ளனரோ அவர்களை இரு கரங்கூப்பி வரவேற்கின்றன. இதனால், இவர்களின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. கல்வி, ஆற்றல், திறமை என்று பல திறன்களை வளர்த்து, நம்மவர்களை அவர்கள் பொருளாதார ரீதியில் வளைத்து, தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். இது அவர்களுக்குக் ஏற்படும் மிகப்பெரிய வளர்ச்சி, நமக்குக் கிடைக்கும் சரிவு.

இந்த மாற்றத்தை மாற்றாமல் நாம் மாற்றம் காணமுடியாது. கஷ்டப்பட்டு திறமையானவர்களை வளர்த்து தாரை வார்ப்பதைவிட நாமே பயன்படுத்தினால், அவர்களுக்குத் தேவையான வசதிகளை இங்கே நாமே செய்து கொடுத்தால் இன்னமும் முன்னேற்றம் காணலாம்.

ஒவ்வொருவரும் வெளிநாடு செல்லும்முன் இங்கேயே ஒளிவிடுபவர்களாகத்தான் இருக்கின்றனர். அவர்களை சல்லடை போட்டு எடுத்து நம் அறிவியல் ஆராய்ச்சிகளில் பயன்படுத்த வேண்டும். ஊக்கத் தொகையைப் பெற்று இலங்கை அரசின் ஆதரவில் கல்வி கற்றவர்களும் செல்கின்றனர். தாய் நாட்டுக்காகத்தான் அவர்கள் உழைக்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனைகள் விதிக்க வேண்டும்.

உலகம் முழுவதும் அவரவர் துறைகளில் வெற்றி பெற்ற நம் இலங்கையர்கள் இருக்கிறார்கள். இவர்களை திரும்பவும் நாம் தாயகம் அழைப்போம். அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்போம். இன்னமும் எந்தச் சூழ்நிலையிலும் முன்னேற்றத்தைக் காணலாம். வளர்ச்சியும் அடையலாம்.

நம் நாட்டில் திறமைசாலிகள் வாழ்க்கையில் வெற்றிபெற பல தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. ஆனால், மேலை நாடுகளில் இதுபோன்று இல்லை. யாருடைய சிபாரிசும் தேவையில்லை. முயற்சிக்கும், உழைப்புக்கும் பலன் உண்டு. இங்கே பலதுறைகளில் போட்டி, சிபாரிசு என்று திறமையானவர்கள் ஒடுக்கப்படுகின்றனர். இதனால்தான் நம் மனிதவள ஏற்றுமதிக்கு மிக முக்கிய காரணம்,.
திறமைக்கு முன்னுரிமை கொடுத்து நடந்தால் வெற்றியாளர்கள் குவிவார்கள். உலகம் முழுவதும் சிதறியுள்ள இலங்கையின் பிள்ளைகள் நம் தாயகத்தின் மகத்தான சக்திகள். இவர்களை இழந்தது நம் துரதிஷ்டமே! இனியேனும் விழிப்புடன் நாம் செயல்பட்டு மனிதவளம் என்னும் மகத்தான சக்தியைப் பயன்படுத்தி இலங்கையை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்வோம்.
 எங்களது தேசிய  ஜனநாயக மனித ரிமைகள் கட்சி ஆட்சியில் பங்கு கொண்டால் இத்தகைய விடயங்களுக்கு  முன்னுருமை  கொடுக்கும் என்பதை இங்கு கூறிக் கொள்ள விரும்புகிறது
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.