புதியவை

காத்திருந்த காதல் - சாரா பாஸ்


மாமன் அவன் வருகைக்காக 
நான் காத்திருந்தேன் .....
மார்கழி குளிரில் அதிகாலையில்
தலைகுளித்துக் காத்திருந்தேன் ....
மாமனின் வரவை எண்ணி
வாசலில் கோலமிட்டேன் ;
புத்தாடை தான் உடுத்தி
புதுப்பானை பொங்கலிட்டு
மண் வாசம் வீசிடவும்
மாமன் அவன் பேசிடவும்
மங்கை என் மனது குளிராதோ ?
நெற்றியிலே பொட்டு வைத்து
நேர் வகிடு தான் எடுத்து
எட்டி நின்று கதவு
இடுக்கின் வழி பார்கின்றேன் ;
அலை அலை யான கூந்தலை
அள்ளி வைத்துப் பின்னலிட
என் பின்னலிலே சூடுதற்கு
மல்லிகைப் பூச்சரத்தொடு
மாமன் அவன் வந்திடுவான் ;
வந்தவுடன் என்னருகில்
ரகசிய மொழி பேசிடுவான் ;
அவன் சொன்ன மொழி நான் கேட்டு
வெட்கத்திலே தலை குனிந்து
என் கால்கள் சித்திரமாய்
கோலமிடும் ...........
வேலைக்கு சென்றிருந்த
மாமனோ திரும்பி விட்டான் ;
நெஞ்சாரக் கலந்திடவே
நானும் தான் காத்திருந்தான் ;
எங்கள் தனிமையை
கலைத்திடவும் ஆளில்லை ;
உள்ளங்கள் பேசும் மொழி
ஒருவருக்கும் கேட்பதில்லை ;
அவன் கைகளுக்குள்
சிறையானேன் ; சிலையாகி நின்று விட்டேன் ;
இன்னும் நான் எழுதிவிட்டால்
எல்லையது தாண்டிடுமே ..!
எங்கள் மோகநிலை
முத்திரைக்குப் பேச்சிழந்து
செயலிழந்து அவன்
மார்பில் சாய்ந்து விட்டேன் ;
உள்ளங்கள் ஒன்று பட
உரிமையுடன் எங்கள்
காதல் கள்ளங்கபடமின்றி
கலந்திருக்கும் எந்நாளும் ...!!!!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.