புதியவை

வாசகி!! நீ வா சகி!! - குடத்தனையூர் சிவா

உடலுக்குள் தினம் நூறு
கோளாறுகள் நடக்குதடி..
மனதுக்குள் தினம் மர்ம
பூகம்பங்கள் வெடிக்குதடி..
இரண்டுக்கும் இடைநடுவில்
என்னுயிரும் மருளுதடி..
உன்பெயரை ஓதிக்கொண்டே
உருண்டையொன்றும் உருளுதடி..

குணவதியே!! குலமகளே!!
உன் வண்ணம் மயக்குதடி..
வனமயிலே!! வா வெளியே
என் நெஞ்சம் தவிக்குதடி..
பகலவனின் சுடுகணையும்
பாவி மெய்யில் குளிருதடி...
பகலிரவு உன் நினைவு
பன்மடங்காய் மிளிருதடி..

கருங்குயிலே!! நின்குரல்தான்
காதெல்லாம் கேட்குதடி..
கானகத்துச் செடிகளெல்லாம்
கனிவாய் கேட்டு பூக்குதடி..
அருங்கவிகள் ஆயிரம்தான்
உனக்காக தோற்றுமடி...
வருங்கவிகள் உன் எழிலை
காவியத்தில் ஏற்றுமடி..

அற்புதமே!! நின் பொற்பதமே-இந்த
அற்பனுக்கு சொர்க்கமடி...-உன்னால்
அப்பனுக்கும் எனக்கும்தான்
அடிக்கடி தர்க்கமடி...
கற்பகமே!! கடுகதியில்
என்னருகில் வந்திடடி...-பல
விற்பனங்கள் செய்திடுவேன்-உன்
சம்மதத்தை தந்திடடி...

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.