புதியவை

பணம் - கவிக்குயில் ஆர்.எஸ் கலா


பணம் இது தானாகக் கிடைக்கப்
பெற இல்லை வரம்.
தவித்தவன் வாய்க்கு நீர் ஊற்றவும் மனிதன் கேட்பதோ பணம்.
பணத்துக்கு உள்ள மரியாதை போல் தந்தைக்கு இல்லை
தினம்.
ஒரு நொடிப் பொழுதில் பணம்
தேடவே தீய வழியைக் காட்டும் மனம்.
பணம் இல்லையேனில் பாரா முகமாய்ப் போகிறது உறவு முறைகள் மறு கனம்.
பணம் இருக்கட்டும் ஓரமாக மனிதனுக்கு நிலைக்கட்டும் நல்ல குணம்.
பணம் கொண்டவன்
தலை வாசலில் தவம் இருப்பதில்லை காகம்.
ஏழை வீட்டுப் புன்னகை போல்
பணம் கொண்டவன்
வீட்டில் இல்லை நல்ல குணம்.
மது மயக்கம் சில
மணித்தியாலம்
பண மயக்கமோ மூச்சு நிறுத்தும் வரை.
பொல்லாத போதையடா
இந்தப் பணம் நினைக்கையிலே தலைக்கு ஏறி விடும்.
மனதை மயக்க வைக்கும்.
மனிதனை மாத்தி வைக்கும்.
மனம் குணம் இவைகளை பூட்டி
வைக்கும்.
மனிதனை மிருகமாக்கும்.
மானத்தை இழக்க வைக்கும்.
மதிப்பையும் வரவழைக்கும்.
மதி கெட்ட மனிதனாக வலம் வர வைக்கும்.
இத்தனையும் செய்யும் பொல்லாத பணம்
நில்லாமல் சொல்லாமல்
சென்றும் விடும்.
பணத்துக்கு தலையும் இல்லை
தலைக்கணமும் இல்லை
பணம் படைத்தவனுக்கு மட்டும்
எப்படி ஏறுகின்றதோ தலைக் கணம் சொல் மனமே.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.