புதியவை

07. அர்ஷை சூழ்ந்த பாம்பு படைத்தது (இஸ்லாமிய பார்வையில் உலகம்) - மிஹிந்தலை ஏ.பாரிஸ்


அர்ஷை சூழ்ந்து
அளப்பரிய பணியில் நிறுத்தவென்று
ஏக இறைவனின் எண்ணக்கருவில்
உருவானது ஒரு நாகம்!

அதன் தலையின் 
அழகு முத்தினால் அலங்கரித்து
அழகிய உருவில் வெளித்தது...!
கண்கள் இரண்டும்
மாணிக்கத்தால் வடிவமைக்கப்பட்டது...!
அதன் வலிமை
இறைவன் அறிந்த விடயம்!

வேவ்வேறு இரத்தினங்களால்
நாற்பதாயிரம் சிறகுகள் பொருத்தப்பட்டது
அதன் உருவத்தை
எழில் பட தோற்று வித்தான்!

ஒவ்வொரு சிறகிலும்
மலக்குகள் ஒருவர் கணக்கில் நிறுத்தினான்
அவர்கள் கைகளில்
உடைவாள்களை கொடுத்தான்
கையில் வாளைச்சுமந்த வண்ணம்
கண்ணியமிக்க இறைவனை துதித்தார்கள்!

அந்தப்பெரும் நாகம்
வாய் திறந்து விட்டால்
மேல் தொங்கும் ஆகாயம்;
கீழ் விரிந்திருக்கும் பூமி
இரண்டும் பிளந்து
பொடி பொடியாகி விடும்!

அந்தப்பாம்பு
ஏதாவது துஆச்செய்தால்
மலக்குகளின் 
துஆக்களையும் விட மேலானது!
அந்தளவு அதிசயமும்
அற்புதமும் நிறைந்த பாம்பு அது!

ஒப்பற்ற ஒரு நாகம்
ஏக இறைவனை
தஸ்பீஹ் செய்த வண்ணம் இருக்கிறது...
அது சற்று உரத்து
தஸ்பீஹ் செய்து விட்டால்
அந்த ஓலியினால் 
கற்பாறைகள் நொருங்கிப் பொடியாகும்;...
வானமும் கூட இடிந்து விடும்!


வல்லமைகளுக்கெல்லாம்
வல்லமையான அந்த அரவம்
இறைபக்தியில் 
இன்றும் உயர் நிலையில்
அதன் இறை பக்கியிடம்
எவர் பக்தியும் நிகராகாது!

எம்பெருமானார் முகம்மது 
ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் மிஃறாஜ் பயணத்தின் போது
அதாவது
மண்ணில் இருந்து
விண்ணுக்கு யாத்திரை...
இறைவன் அழைத்தான் எனும்
அற்புதச்சரித்திரம்!
பறவை ஒன்றின் மூலம்
மண்ணில் இருந்து
விண் நோக்கிய பயணம்!

அந்தச்சந்தர்ப்பத்தில்
புகழ் பூத்த பொன்னான இரவில்
அல்லாஹ்வின் தூதரை நோக்கி
மிகவும் மெதுவான குரலில்
அஸ்ஸலாமு அலைக்கும் என்று
அன்பைப் பகிர்ந்து விட்டு
அண்ணலாருக்கும்
அண்ணலாரைப்பின் பற்றும்
அனைவர் மீதும் சாந்தியுண்டாகும்
என்று இறைவனிடம் துஆ
அதாவது பிராத்தனை செய்தது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.