புதியவை

08. பூமிகளைப் படைத்தது (இஸ்லாமிய பார்வையில் உலகம்) - மிஹிந்தலை ஏ.பாரிஸ்


அங்கும் இங்கும்
அலைமோதிக்கொண்டிருந்த காற்றை ஏவினான்
தண்ணீரை அடிக்கும் படி...!

காற்று தண்ணீரை
கலக்கி கலக்கி அடித்தது
தண்ணீர் தளும்பி தளும்பி
அலைகள் எழுப்பியது
அலைகள் நுரைகளை
உயர உயர கக்கியது
நுரைகளில் இருந்து
ஆவிகள்(புகை) மேல்நோக்கி உயர்ந்தது!

பின் நுரையை ஏவினான்
உலர்ந்து விடும் படி...!
நுரைகள் முழுவதும்
உலர்ந்து மண்ணாகி பூமியானது!
அவ்வண்ணம் இறைவன் எண்ணம்
பூமி வண்ணமான பின்பு
தண்ணீரின் முதுகில்
பூமியை விரித்து விட்டான்!

இந்த பூமியெனும் தாய்
ஏழாக படைக்கப்பட்டது
முதலாவது பிரசவமெனும்
பேர் நாமத்தை கை பற்றிக்கொள்வது
றன்ஹா என்று அழைக்கப்படுகிறது...
அங்கு வீசும் காற்றை
மலடாக மாற்றியமைத்தான்
வேகத்தை குறைத்து வீசும் வண்ணம்
எண்ணற்ற கயிறுகளால் கட்டினான்!

கயிறுகளில் ஒவ்வொன்றின் மீதும்
ஓவ்வொரு மலக்குகளை நிறுத்தினான்...!
அதில் வாழும் இனத்தினர்
அல்பறுசமு என்று அழைக்கடுகின்றனர்...
பாவஞ் செய்தால் தண்டிக்கப்படுவர்
நன்மை செய்தால்
கண்ணியப்படுத்தி சன்மானம் வழங்கப்படும்!

இரண்டாம் பூமி
குல்தாவு என்று குறிப்பிடப்படும்
அதில் குடியிருப்பவர்கள்
லுன்னு என்று செல்லப்படுவர்
அவர்களின் ஜீவனம்
அவர்களின் மாமிசமும் இரத்தமும்!

மூன்றாம் பூமிக்கு
அறுபா என்று பெயர் சூட்டப்பட்டது
அங்கு கட்டிக் கறுப்பு நிறத்தில்
நட்டுவக்காலிகள் இருக்கின்றன...!
அவை ஒவ்வொன்றும்
கூர் ஊசி முனைகள் போல்
அறுபத்தெட்டு கொடுக்குகளும்
அவை ஒவ்வொன்றிலும்
பல கிலோ நஞ்சும் உண்டு!
அதில் சிறு துளி பட்டால்
உயிர்கள் இறந்து விடும்!
அதில் வசிக்கும் மக்களுக்கு
சமக என அழைப்படுவர்!
அவர்களின் ஆகாரம்
கொழுப்பும் மழை நீருமாகும்!

நான்காவது பூமி
அறுயா என்று பெயரிடப்பட்டது
அந்த பூமியில்
நரத்து பாம்புகள் போல்
பெரும் மலை போல் 
பாம்புகள் இருக்கும்
அவைகளின் வால்கள்
ஈச்சங்கொப்புக்கள் போல் நீளமானது...
அந்த வாலால் அடித்தால்
கல்லு மலைகளும் பொடியாகும்!
ஆதன் குடியினத்திற்கு
ஜல்ஹா என்று செல்லப்படும்!
அவர்களுக்கு கண்கள் மின்னும்
கால்கள் இராது!
காட்டுக்குருவிகள் போல்
சிறகு இருக்கும்!
அவர்கள் முதிராமல்
மரணம் நெருங்காது
முதிர்ந்த பின்தான் இறப்பார்கள்!

ஐந்தாவது பூமி
முல்தா என்று பெயர்!
அதில் நிராகரிப்பாளர்கள் மட்டுமே
வாசகம் செய்வார்கள்!
அவர்களின் கண்களில்
ஒரு வித கற்கள்
தொங்க விட்டிருக்கும்
அது கீழே விழுந்தால்
நெருப்புகளைக் கக்கும்
உடல் எரிந்து வெடித்துச்சிதறும்!

அதாவது அதுவே
கல்லலான தரையும்
தரையான தீயுமாகும்
நரகத்தின் நெருப்பாகும்!
அந்த குடியிருப்பாளர்கள்
குல்லத் என்று
சொல்லி அழைக்கப்படுவர்!
அவர்கள் எண்ணிக்கை குறையாது
சிலரை விலர் தின்று
குறைத்துக் கொள்வார்கள்!

ஆறாவது பூமி 
சிஜ்ஜின் என்று பெயர் வைத்துள்ளான்!
அங்கு நரகத்து வாசிகளின்
பட்டோலைகள் நிறைந்திருக்கும்
அவர்களின் நன்மைகள் தாழ்ந்திருக்கும்
அங்கு குடியிருப்பவர்கள்
குதாத்தென்று கூப்பிடப்படுவர்
அவர்கள் பறவைகளின் முதுகில்
முடங்கிக் கிடந்து
இறைவனை சந்திக்க வேண்டுமென்று
துதித்து துதித்து துடிப்பார்கள்!


ஏழாவது பூமியாவது
அஜியத்து என்று அழைக்கப்படும்
அந்த பூமியில்
வழிகெடுப்பவன் வழியெங்கும் குடியிருப்பான்
இதில் குடியிருப்பவர்களை
கையூமென்று கண்ணியப்படுத்தி அழைக்கிறான்!
அதில் ஓணான் புலியென்று
ஒப்பட்ட படைப்புக்கள்!
அந்த பூமியே
ஓவ்வொருவரும் சண்டையிட்டுக்கொள்ளும்
இந்த ஒப்பற்ற பூமி!

இந்த பூமி
ஆடியாடி தள்ளாடியது
உடனே அல்லாஹ் ஏவினான்
ஒரு மலக்கை
பூமியைத்தாங்கும் படி...!
இப்பொழுது அவர்கள்
இறைவனை துதித்து வண்ணம்
இந்த பூமியைத்தோளில் சுமக்கிறார்கள்!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.