பூமிகளை படைத்தான்
அவைகள் அனைத்தையும்
ஒன்றின் பின்
ஒன்றாக பாய்; போல்
தண்ணீர் மேல் விரித்தான்
அருமையாக விதைத்தான்...
பூமிகள் தண்ணீரை
போர்வை போல் மூடிக்கொண்டது!
இரண்டு நாட்களில்
இதிகாசம் எழுதினான்
இறைவனின் வல்லமைகளை
வரலாறாக பொறித்தான்
அழகிய ஓவியம் வரைந்தான்
படைப்புக்களில்
தன்னை மிஞ்சும் படைப்பாளிகள்
எவரும் இல்லை என்று
இரு இரவில் நிருவிக்காட்டினான்!
ஏய் அலைகளே...!
நீ ஒடுங்கி விடு என்று
அடுத்து
அலைகளை நோக்கித்தொடுத்தான்
உடனே அலைகள்
ஒடுங்கிக்கொண்டது!
கொந்தளித்து கொந்தளித்து
தளும்பிக் கொண்டிருந்த அலைகள்
குழுறல்களை நிறுத்தியது...!
ஓசைகள் இல்லாமல்
ஓய்ந்து போனது!
அதன் மொழிகள்
மௌனமாகிப்போனது!
அதிலிருந்து
மலைகளைப் படைத்தான்
மலைகள் ஒவ்வொன்றும்
பூமியின் முளைகலானது
அதுவே பின் உலமானது!
பிரபஞ்சம்
பரிணமித்ததன் மூலப்பொருள்
இந்த மலைகள்தான்
மலைகள் முளைக்காவிட்டால்
உண்மையில் உலகம்
ஒரு நாளும் வராது
அல்லது இராது எனலாம்!
அந்த மலைகளின் வேர்களே
உலகம் எனும் உயிரானது!
மலைகளின்
தலையென்று கூறப்படுவது
காபு எனும் மலை!
அந்த மலையின்
வேர்களைப் பற்றிய வண்ணம்
ஏனைய குன்றுகள் தொங்கும்!
மலை என்னும் முளைகளின்
மகாசக்திகள் இல்லையேல்
இவ்வுலகம் இல்லை!
தண்ணீர் ஊற்று
இல்லாமல் போனால்
தரணி எப்படி வாழும்...?
அவை அனைத்தும்
மலைகளின் கைகளில்
வைத்து பொத்த வைத்துள்ளான்...
இன்னும் சொல்லப்போனால்
மலைகளால் விஞ்ஞானம்
பல கலைகள் படைக்கிறது...
உற்று நோக்கினால்
உண்மைகள் உணர்வைத் தொடும்
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.