புதியவை

12. வானங்கள் படைத்தது (இஸ்லாமிய பார்வையில் உலகம்) - மிஹிந்தலை ஏ.பாரிஸ்


தண்ணீரில் உப்புக்கலந்து
கடல் எனும் 
கவிதையை வரைந்தான்!
பின் கடலின் 
மேல் பகுதியை உயரும் படி
உத்தரவிட்டான்!

உடனே
இறைவனின் ஏவலை 
நிறைவேற்றும் வண்ணம்
மேல் நோக்கித்தாவியது!

ஏழு பூமியிலிருந்தும்
அந்த இதிகாசம் நிகழ்ந்தது
அது மறுகணமே
வானமாக மாற்றியமைக்கப்பட்டது!

முதல் வானம்
பசுமையான மரகதத்தின்
வனப்பு கொண்டது
அதனுடைய பெயர்
தர்பீயா எனப்படும்...
அதில் குடி இருக்கும் மலக்குகள்
மாட்டின் தோற்றத்தில்
மலர்ந்து இருப்பார்கள்...!
அங்கு சாட்டப்பட்டிருக்கும் 
மலக்கின் பெயர் இஸ்மாயில்
அவர் பொறுப்பில்
அனைத்து மலக்குகளும் இருப்பார்கள்!

இரண்டாம் வானம்
சிவந்த இரத்தினத்தால் 
உருவாக்கப்பட்டிருக்கும்
அதில் குடியிருக்கும் மலக்குகள்
பருந்தின் உருவத்தில்
உயிர் வாழ்வார்கள்!
அவர்களுக்காக சாட்டப்பட்டிருக்கும்
மலக்கின் பெயர்
மஜ்ஜாயீல் என்று அழைக்கப்படுவார்!

மூன்றாம் வானம்
மஞ்சள் நிற இரத்தினத்தில்
வடிவமைக்கப்பட்டிருக்கும்...
அங்கு வாழ்ந்து கொண்டிருக்கம்
மலக்குகளின் தோற்றம்
எருதின் வடிவில் காணப்படும்!
அங்கு சாட்டப்பட்டிருக்கும் மலக்கு
சகிதாயீஸ் எனப்படுவர்...
அவரின் ஆளுமையில் கீழ்
மற்றவர்கள் வாழ்வார்கள்

நான்காம் வானம்
வெள்ளியில் மின்னும்
றம்லூன் என்று
அது அழைக்கப்படுகிறது..
அங்கு குடியிருக்கும்  மலக்குகள்
குதிரையின் வேடத்தில் இருப்பார்கள்
அவர்களைக் காத்துக்கொண்டிப்பவர்
சல்சாயீல் என்பவராவர்!

பொன்னால் படைத்து
பூங்தேட்டமாக ஐந்தாம் வானம்
அழகாக இருக்கும்!
அதில் குடியிப்பவர்கள்
றக்கா என்று அழைக்கப்படுகிறார்கள்
அவர்கள் ஆட்டின் தோற்றத்தில்
அங்கு வாழ்வார்கள்!
அவர்கள் கல்காயீஸ் என்பவரின்
கட்டளையின் கீழ் இருப்பார்கள்!

ஆறாம் வானம்
அழகிய வெண்முத்தில் படைத்து
பளிச்சிடும் வண்ணம் வைத்திருக்கான்
றம்ஹா எனும் நாமத்தோடு
சிறு குழந்தையின் தோற்றத்தில்
உரிம்மம் கொண்டிருப்பார்கள்...
சம்ஆயீஸ் இவரே
அவர்களை பாதுகாப்பார்கள்!

ஏழாம் வானம்
பிரகாசம் வீசும் ஒளியினால்
உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்
அதுதான் நமது பூமியின்
கொடை வள்ளல்
தலைக்கு மேல் தொங்கும் 
தண்ணீர் ஊhற்று...!
அதனுடைய பெயர் அல்யா
அதில் குடியிருக்கும் மலக்குகள்
ஆதமுடைய பிள்ளைகள் போல்
வடிவத்தில் பிரகாசிப்பார்ள்!
அவர்களை காப்பவர்
றம்யாயீல் என்று
செழித்து விளிக்கப்படுகிறது!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.