புதியவை

13. சூரியன் படைத்தது (இஸ்லாமிய பார்வையில் உலகம்) - மிஹிந்தலை ஏ.பாரிஸ்


அர்ஸ்சின் ஒளி என்பது
அகிலம் காணாத புத்தொளி
அந்த அற்புத ஒளியில் இருந்து
செற்ப்ப ஒளி எடுத்து
பொழுதை புனைந்தான்!

தணல் வீசும் சூரியன்
இறை  வணக்கத்த்தில் இருந்து
நிறைவடைந்து கொண்டிருக்கும்
அவன் கட்டளைக்கு
அடி பணிந்த வண்ணம்!

சூரிய வெப்பம்
ஒரு போதும் அங்கங்களை
அப்பம் சுட்டு விடாமல்
அழகிய உருவில் 
மலக்குகளை மலர வைத்தான்!

அவர்களின் இன்முகம் பார்த்து
அல்லாஹ் கூறினான்
இருள் ஒன்றை உருவாக்கி விட்டு
அதற்குள் நுழைந்து கொள்ளும் படியும்
அதில் இருந்த வண்ணம்
சூரியனை இயக்கவும் உத்தரவிட்டான்!

அல்லாஹ்வின்
திருக்கட்டளை வந்ததும்
பொறுத்திருக்காமல் வெறுத்திடாமல்
கடும் வேகத்தில்
அந்த காரிருளினுள் நுழைந்தார்கள்
அச்சம் என்பது
அவர்களுக்கு ஒருநாளும் வருவதில்லை
அவர்கள் அல்லாஹ்வின்
உண்மையான அடியார்கள்!

பரிதியோடு ஒரு வித
திரவத்தை சேர்த்து கலந்தான்
பின் பரிதிக்கு ஏவினான்
பூமிக்கு ஒளியைத்தூவும் படி!
வெண்மை சக்தியில்
சிரிந்திருந்த பூமி மேல்
ஒரு வித ஊதாவையும்
நீலநிறத்தை அதிகம் சேர்த்து
கலக்கி பூமிக்கு ஏவினான்

பூமிக்கும் வானுக்கும்
ஒரு வித உடன்பாட்டை
இறைவன் கொடுத்து வைத்தான்
அது ஈக்கும் காந்த சக்கியாகும்...
அதாவது ஆண் பெண்
இருவருக்கும் இடையில் நடக்கும்
அந்த தாம்பதிய உறவைப்போல்!

ஊதா மற்றும் நீலநிறம்
கலந்த ஒளிச்சிதறலால்
செம்மஞ்சள் நிறத்தை உருவாக்கி
பூமியை நோக்கி
முத்தமிட வைத்தான்!

அதுதான் மனித கண்களில்
இளமஞ்சள் நிறத்தில் தென்படும்
வெய்யில் எனும் ஒளி!

அந்த வெய்யிலைக் கொண்டு
பூமியை புன்முறுவல் செய்யும்
பெரும் பாக்கியத்தை
பரிதியிடம் பாரப்படுத்தி
மலக்குகளை சாட்டி விட்டான்!

அந்த சூரியக் கதிர்கள் மூலம்
இந்த பூமியின் ஆயுளை
ஆக்கி விட்டான்
அல்லாஹ்வின் பெருங்கொடையால்...
இன்னும் பல புதுமைகளும்
நிகழ்த்தி வைத்துள்ளான்


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.