புதியவை

14. சந்திரன் படைத்தது (இஸ்லாமிய பார்வையில் உலகம்) - மிஹிந்தலை ஏ.பாரிஸ்


அர்ஸ்சுக்கு ஒரு போர்வையுண்டு
இன்னுமொரு அழகிய பெயர்
ஒரு வித பால் ஒளியால்
மறைக்கப்பட்டிருக்கும் திரை எனலாம்!

அந்தப்பால் திரையில் இருந்து
வெண்துண்டை எடுத்து
குளிரும் நிலாவை
பால் பொழிய படைத்தான்...!
இந்த பூமியை நனைக்கும்
நிலாவும் அர்ஸ்சின்
ஒளியில் உருவான வெண் துளியே!

பொழுதையும் நிலவையும் இனைத்து
ஒரு விசித்திரத்தை ஏவியவன்
அதிலும் மலக்குகளை சாட்டி
மர்மமாக இயங்கும் படி ஏவினான்!

இரு தீபங்களையும்
ஒருங்கிணைத்து நிருவிய இறைவன்
இரவையும் பகலையும்
மாறி மாறி இழுக்கும் வண்ணம்
மலக்குகளை ஏவினான்
அவர்கள் காரியம் முழுவதையும்
நுண்மையாக செய்து
பகல் இரவு என்று
பூவுலகை மாற்றியமைக்கிறார்கள்...
மாறி மாறி சூழல்கிறது!

படைப்புக்களைப் பற்றி
கருத்துக்கள் பல பரவியுள்ளது
அதிலும் நாட்கள் உருவாக்கம்
பற்றி பேச்சுக்கள் 
ஒவ்வொரு நோக்கில் போகிறது...!

ஒரு மதக்காரன் ஒரு விதம்
இன்னொரு மதம் வேரொரு விதம்
மதங்களின் கூற்றுகளையெல்லாம்
பின்தள்ளி விட்டு விஞ்ஞானம்
மேல் தரித்து விட்டாதால்
முன்னிலை படுத்தப்படுகிறது...!
உண்மை அதுதான் என்று
உலகமும் நம்பி விடுகிறது!

கருத்துக்கள் வந்தால்
வருத்தப்படாமல் ஏற்றுக் கொள்வது
இஸ்லாமிய நுணுக்கம்!
ஏனெனில் விஞ்ஞானம்
கண் விழிக்க முன்னர்
இஸ்லாம் பார்க்க துவங்கி விட்டது!

இஸ்லாமியப்பார்வையில்
வியப்பும் விந்தையும் நிறைந்திருக்கும்
அதனுடன் ஒப்பிட்டால்
விஞ்ஞானம் அதை ஒத்திருக்கும்!
இஸ்லாம் சொன்ன விடயங்களையே
விஞ்ஞானம் கண்டு பிடித்து
தரணியில் சரித்திரம் படைத்துள்ளது!

வான் மண்டலத்தில்
கிரகங்கள் உண்டாக்கினான் 
வெள்ளிக்கிழமையில் இருந்தே
நாட்களை விளித்தான்
இந்த வெள்ளி எனும்
நல்ல நாளிலேயே 
கர்மங்களை செய்தான் என்பதன்
சான்றுகள் பல உண்டு!

ஆதம் நபியை உருவாக்கினான்
அதாவது 
முதல் மனிதர் உருவாக்கம்
அவருக்கு றூஹை ஊதினான்
அதாவது
உயிரை உடலுக்குள் ஏவியது!
அதே உயிரை
வெள்ளியில் மீளவும் கைப்பற்றியது...!

அதே வெள்ளிக்கிழமையில்
முஸ்லீம்களுக்கு ஜூம்ஆ எனும்
பெருநாளை பிரகடணப்படுத்தியது
அன்று கேட்க்கும் 
துஆக்களை கபூலாக்குவது...!

அதாவது
வெள்ளிக்கிழமைகளில் கேட்க்கப்படும்
பாவ மண்ணிப்புக்களை ஏற்றுக் கொள்ளல்!

உலகம் அழியும் நாள்...
கியாமத்து நாள்...
அனைத்தும் வெள்ளியிலேயே
நிகழும் என்று
அண்ணல் நபி அவர்களே
செல்லி விட்டார்கள்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.