புதியவை

17. சுவர்க்கத்து வாசல்கள் (இஸ்லாமிய பார்வையில் உலகம்) - மிஹிந்தலை ஏ.பாரிஸ்


சுவர்க்கத்து மாளிகைகள்
இரத்தினத்தால் பொறிக்கப்பட்டிருக்கும்
எட்டு வாசல்களைக் கொண்டு
அலங்கரிக்கப்பட்டிருக்கும்...
ஒவ்வொரு வாசலிலும்
இவ்விரு தலங்கள்
கவ்விய வண்ணம் காட்ச்சியளிக்கும்!

முதல் வாசலில்
லாஇலாஹ இல்லல்லாஹு
முகமம்மதுர் றஸுலுல்லாஹியென்றும்
அதாவது
வணக்கத்திற்குரிய இறைவன்
அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை
முகம்மது நபியவர்கள் அவன்
திருத்தூதரும் அடியானும் அவார்கள்...
என்று அறபு மொழியில்
அழகிய முத்துக்களால் பதித்து
முழுமை படுத்தப்பட்டிருக்கும்
அது பொன் நகையால்
கண் சிமிட்டிக்கொண்டிருக்கும்
நாயகம் அவர்களின்
நல்வரவை எதிர் பார்த்த வண்ணம்!

இரண்டாவது வாசலில்
பாபுல் முஸல்லீன் எனும்
வாசகம் காணப்படும்...!
அதாவது
உலூவை ஒழுங்காக செய்து
தொழுகையை முறையாக நிறைவேற்றியவர்களின்
வாயில் என்று பொருளாகும்...

மூன்றாவது வாசலில்
பாபுல் முஸக்கீன் எனும்
வாசகம் பொறிக்கப்படடிருக்கும்
அதாவது
தேக ஆரோக்கியத்தால்
ஏழைகளின் இறைவன் வரிகளை
முறையாக கொடுத்தவரின்
வாசல் என்றும் பொருளாகும்!

நாலாவது வாசல்
பாபுல் ஆமிறின் என்று
வரையப்பட்டிருக்கும்
அதாவது
நன்மையை மட்டும் செய்பவருக்கும்
தீமையை விட்டு விலகியர்களுக்கும்
என்று அர்த்தப்படும்!

ஐந்தாவது வாசல்
சபா அத் எனப்படும்
அதாவது
உடல் இச்சையை விட்டு
விலகியவர்களுக்கு என்று கூறலாம்!

ஆறாவது பாபுல் ஹஜ்ஜாஜி
என்று குறிப்பிடப்பட்டிருக்கும்
ஹஜ்ஜி செய்தவர்களுக்கும்
உம்ரா செய்தவர்களுக்கும்
உரித்தானது எனப்பொருள் படும்!

ஏழாவது பீசபீல் என்று
வாசலில் பதியப்பட்டிருக்கும்
அதாவது
அல்லாஹ்வின் பாதையில்
ஆயுதப்போராளிகளாக இருந்தவர்களுக்கு
அந்த வாசலென்று பொருளாகும்!

எட்டாவது பாபுல் முரீதின் என்று 
பொன் வரிகள் மின்னிக்கொண்டிருக்கும்
விழிகளை இழுத்த வண்ணம்!
அதாவது
இறைவன் தடுத்திருக்கும் விடயங்களை
முற்று முழுதாக வெறுத்தும்
இறைவன் ஏவிய விடயங்களை மட்டும்
செயற்படுத்தியவர்களின்
திரு வாசலென்றும் பொருள் கூறலாம்!

அந்ததந் வாசல்களால்
அந்தந்த காரியத்தை இந்த மண்ணில்
செய்த மனித வர்க்கம்
சுவர்க்கத்தில் நுழைவார்கள்!

அதன் வழியே நுழையும்
அனைத்து சுவர்க்கவாசிகளின்
கண்களை கவரும் வண்ணமும்
அவர்களின் துணைகளாகவும்
ஹுறுல் ஈன் என்பவர்கள் இருப்பார்கள்!
அதாவது
சுவர்கத்துக் கண்ணழகிகள் என்று
சுவர்கத்து வஸ்துக்களால் 
இறைவன் படைத்து வைத்திருப்பான்
அவர்களின் அழகுகளை
இறைவனால் மட்டுமே வர்ணிக்க முடியும்
அதில் ஆண் பெண் என்று
இரு பிரிவினரும் இருப்பார்கள்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.