புதியவை

18. நரகங்களைப் பற்றியது (இஸ்லாமிய பார்வையில் உலகம்) - மிஹிந்தலை ஏ.பாரிஸ்


நரகம் என்பது
ஜஹன்ன என்று அழைக்கப்படும்
அதன் வாசல்கள்
ஏழாக இருக்கும்

எழுபது வருடம்
தொலை தூரம் 
இரண்டு வாசல்களின்
இடைப்பட்ட தூரமாகும்

எழுபதாயிரம் மலைகள் உண்டு
ஒவ்வொரு மலையும்
தீயைக் கொண்டு 
உருவாகியிருக்கும்

ஓடைகள்
எழுபதாயிரம் உண்டு
அவையும்
நெருப்பில் உருவானதுதான்!

மாளிகைள் உண்டு
வீடுகள் உண்டு
விலங்குகள் உண்டு
நிழல் கொடுக்கும்
கள்ளி மரங்கள் உண்டு
குடிக்கத் தண்ணீர் உண்டு
உண்ண ஆகாராம் உண்டு
எல்லாமும் நெருப்பினால் ஆனது!

தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டால்
உடனே கிடைக்கும்
அது ஊன் தண்ணீராயிருக்கும்!

கறுத்து நீண்ட கொடுக்குடைய
நட்டுவக்காலிகள் இருக்கும்
நச்சுப் பாம்புகள்
நிறைந்து கிடக்கும்
இதுதான் ஏக இறைவனின்
வதைக்கூடமென்று வர்ணிக்கப்படுகிறது
அவனே அதை பல இடங்களில்
திருமறையில் வர்ணித்துள்ளான்!

நரகத்தை தனதாக்கிக்கொள்ளும்
நரகவாசிகளுக்கு என்று
எழுபதாயிரம் சித்திரவதை முறைகளை
அல்லாஹ் ஏற்ப்படுத்துவான்!

அதில் முதல் ஜஹன்னம்
அதாவது நரகம்
பெரும் பாவங்களில்
ஈடு படும் மனிதர்கள்
புசிப்பார்கள்
இல்லை மனிதர்களை
அது ருசிக்கும்!

இரண்டாவது
லால எனப்படும் நரகமாகும்
அது இறைவனை நிராகரித்து
புத்துக்களை இறைவனாக மாற்றி
வழி பட்ட இழிவாளர்களுக்கு என்று
அல்லாஹ் எழுதியிருப்பான்

மூன்றாவது குத்துமா என்றும்
நான்காவது சகீறு என்றும்
ஐந்தாவது சக்கறு என்றும்
ஆறாவது ஜகீம் என்றும்
ஏழாவது காவியா என்றும்
கூறப்படுகிறது!

அவை ஒவ்வொன்றிலும்
ஒவ்வொரு கூட்டத்தைப் போடுவான்
நிராகரிப்பாளர்கள் துவக்கம்
இறைவன் கட்டளைப் படி
வாழாத எல்லோரும் சந்திக்கநேரும்!

இந்த நரகங்களில்
மனித இனம் உட்பட
பேய் பிசாசுகளும் அடங்கலாகும்
அனைத்தும்
தரப்படுத்தப்பட்டு பிரிக்கப்பட்டிருக்கும்

மனிதன் மறுத்தாலும்
வெறுத்தாலும் விரும்பாவிட்டாலும்
பூவுலகில் வாழும் 
ஒவ்வொரு மனிதனும் 
மண்ணறை சென்ற பின்
சுவர்க்க நரகத்தினுள்
நுழைந்தே ஆகவேண்டும் என்பது
இஸ்லாமிய நம்பிக்கை
இல்லை அதுதான் உண்மை!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.