புதியவை

19. சுவர்க்கம் நரகம் இருப்புப்பற்றியது ( இஸ்லாமியப்பார்வையில் உலகம்) - மிஹிந்தலை ஏ.பாரிஸ்
அர்ஸ் என்னும்
அந்த ஏக இறைவனின் மையம்
ஏங்கு இருக்கிறதோ...
அங்குதான் இந்த நரகமும்
சுவர்கமும் இருக்கிறது...!

அர்ஸின் வலப்பக்கம் சுவர்க்கமும் 
இடப்பக்கம் நரகமும்
இருப்பது என்பது இஸ்லாமிய நம்பிக்கை!
அதுதான் உண்மையின்
வெண்மை எனலாம்!

அந்த அழகிய சுவர்க்கம்
பணம் கொடுத்து விட்டால்
உடனே கிடைத்த விடாது
மனம் வைத்தால் கிடைக்கும்
தன்னிச்சைகளை அடக்கி
சன்மார்க்கப்படி வாழ்ந்தால்
வழிகள் திறக்கப்படும்

சுவர்கத்து நறுமணங்களும்
பூஞ்சோலைகளும்
உடல் தழுவும் மென்மையான காற்றும்
மனிதன் நினைத்து விட்டால்
உடன் கிடைக்கும் வரமும் கிடைக்கும்
ஒரே இடம் சுவர்க்கம் மட்டுமே!

இறைவனின் மறுமை வீடு
அது மனிதர்களுக்காக வடிவமைக்கப்பட்டது
அதில் நுழைந்து
உயிர் வாழ்பவனே
இறைவனின் நேசன் எனப்படுவான்!
அங்கு நுழைந்து விட
நுழைவுச்சீட்டுகளை இவ்வுலகில்
வைத்து விட்டான்!

நுழைவதற்கு நற்கருமங்களே
மறுமையில் பணமாக மாறும்
எத்தனை போர்தான்
சேமித்து  வைத்துள்ளோம்
சுவர்கம் போய் சேர...?

இறைவனின் படைப்புக்கள்
எல்லாமும் இரண்டாகவே இருக்கும்
ஆண் பெண் துவக்கம்
ஆராய்ச்சி செய்தால்
சுவர்க்கம் நகரம் வரை இரட்டைகளே!

சுவர்க்கம் எவ்வளவு தூய்மையோ
அதிலிருந்து மாறு பட்டு
மாறு செய்தவர்களின் மறு உலகம்
நரகம் என்று கூறுகிறான்!

அதை ஏழு தட்டுக்களாக
வரிசைப் படுத்திள்ளான்
அங்கும் அனைத்து வித
கனி வகைகள் உட்பட
தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் படி
மிதமாகவே படைத்து வைத்துள்ளான்
ஆனாலும் அவை அனைத்தும்
நெருப்பினாலேயே உற்ப்பத்தி செய்துள்ளான்!

கனி ஒன்றை கேட்டு விட்டால்
உடனே கிடைக்காவிட்டாலும்
தாமதித்து கிடைக்கும்
அது தீயாகவே இருக்கும்
தீயை எப்படி
நாவால் சுவைப்பது என்று
மனிதன் திண்டாடுவான்
ஆனாலும் அனுதாபம் இராது
இறைனிடம் அது வராது

சுவர்கம் நரகம் இரண்டையும்
இருவேறாக பிரித்து
முதன்மைப் படுத்தியும்
புறக்கணித்தும் படைத்தாலும்
ஒன்றை அழகு படுத்தியும்
மற்றையதை அருவருப்பால்
நிரம்ப செய்து இருந்தாலும் 
இரண்டுமே இறைவனை 
துதித்த வண்ணதான் இருக்கும்

இறைவன் நரகத்தை 
விரும்ப மாட்டான்
இருந்தாலும் நரகத்தை நாடும்
மனித குலத்தின் தேவை
அது என்பதால்
அதையும் படைத்து முடித்தான்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.