புதியவை

20.ஜின், ஜான், இபுலீஸையும் படைத்தது (இஸ்லாமியப்பார்வையில் உலகம்) - மிஹிந்தலை ஏ.பாரிஸ்


நெருப்பைப் படைத்தான்
அது புகையோ
சூடோ இல்லாத நெருப்பு

ஒரு படைப்பை
உருவாக்கும் முதல்
ஒரு வித எடுப்பு
அது இறைவனின்
அற்ப்புதப் படைப்பு

அந்த குளிர்ந்த தீயிலிருந்து
ஜானைப்படைத்தான்
பின் மாறிஜு எனும்
ஒரு வலிமை மிக்க படைப்பையும்
படைத்தான்!
அதிலிருந்து பெண் சாதியைப் படைத்து
மாறிஜா என்று பெயரும் வைத்தான்!

மாறிஜும் மாறிஜாவும் கூடியதால்
ஜான் என்று
ஒரு சிசுவும் பிறந்தது
பின் ஜானுக்கு
ஜின்னென்று பிள்ளை பிறந்தது
அதிலிருந்தே ஜின் கூட்டம்
பிரிந்து சென்றது!

பிரிந்த அந்தக்கூட்டத்திலிருந்து
இபுலீஸுகள் அதாவது
மனிதனை வழிகெடுக்கும் ஒரு கூட்டம்
இல்லையேல் பிசாசுகள் உருவானது!

பின் ஜின்னுக்கு
ஒரு ஆணும் பெண்ணுமென்று
இரு பிள்ளைகள் பிறந்து
இருவருக்கும் திருமணமும் நடந்தது

அதிலிருந்து பல்லாயிரம்
குழந்தைகள் பிறந்தது
பின் மண்ணைப்போல்
ஜின் இனம் பெருகி விட்டது
ஜின்களும் பிசாசுகளும்
கலப்புத் திருமணங்கள் செய்து கொண்டன
பின் இனம் பெருகி
மண்ணை விட பன்மடங்கானது...

முதலில் ஜல்சாயீ எனும்
ஜின்னுடைய மகள் றூகா
இபுலீஸை மணம் செய்தாள்
ஜல்சாயீல் எனும் ஜின்
ஜானுடைய மகன்!

பின் புத்தூன் குத்தூனா என்றும்
சுகல ஷகுலா என்றும்
தகறு தகறா என்றும்
ஷைசான் ஷைசானா என்றும்
கபுத்தசு கபுத்தாசா என்றும்
இரட்டைப் பிள்ளைகளை ஈன்றால்
இனப்பெருக்கம் இரட்.டிப்பானது!

மனித கண்ணில் 
புலப்படாத பிசாசுகள்
குப்பை மேடுகளிலும்
பெரும் காடுகளிலும்
எங்கெல்லாம் நுழைந்து வாழ முடியுமோ
அங்கெல்லாம் புகுந்து கொண்டது!
உலகில் உள்ள அனைத்து
உயிருள்ள உடலிலும்  ஒப்பாய் விட்டன!

ஜின்னும் பேய்யும்
இரண்டும் கண்ணுக்கு தெரியாது
அப்படித்தெரிந்தாலும்
நீண்ட நேரம் இராது!

பூமியில் பிசாசுகளின் வம்சம்
பெருகி விட்டதால்
ஜானை வான் உயர்த்தினான்
ஜின்கள் எல்லாவெற்றையும்
முதல் வானில் குடியிருக்கும் படியும்
இறை அச்சத்தில்
உறைந்திடும் படியும் எத்தரவிட்டு
ஆகாயத்தில் ஏவி
அடைக்களம் கொடுத்து விட்டான்!

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.