புதியவை

கால்வாய் சுரங்கம் வழியாக இங்கிலாந்து செல்ல முயற்சி: 2000 பேரை தடுத்து நிறுத்தியது பிரான்ஸ்

கால்வாய் சுரங்கம் வழியாக இங்கிலாந்து செல்ல முயற்சி: 2000 பேரை தடுத்து நிறுத்தியது பிரான்ஸ்
கால்வாய் சுரங்கம் வழியாக பிரான்ஸில் இருந்து இங்கிலாந்து செல்ல முயற்சித்த சுமார் 2000 குடியேற்றவாசிகள் பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
சுரங்கப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர் வழங்கிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது இவர்களது சட்டவிரோதப் பயணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இங்கிலாந்திற்குப் பலர் சட்டவிரோதமாகப் பயணித்து வருகின்றனர்.
குடியேற்றத்திற்காக இவ்வாறு பயணிப்போரின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை இரவு கால்வாய் சுரங்கம் வழியாகப் பயணித்த குடியேற்றவாசிகளில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலர்  காயமடைந்துள்ளதாகவும் சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 1,900 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.