புதியவை

21. அல்லாஹ் மலக்குகளுக்கு அறிவித்தல் (இஸ்லாமியப்பார்வையில் உலகம்) - மிஹிந்தலை ஏ.பாரிஸ்


ஜின்களின் அந்த மாறுதல்களை
செய்த பின் ஜான் வான் 
உயர்ந்த மறு கணம்
அடுத்து மலக்குகளை
பார்த்து தொடுத்தான்....!

“மலக்குகளே...
என் ஒளி விளக்குகளே....
நான் இரண்டு வீடுகளை
படைத்துள்ளேன்....!
ஒன்று என்
கொடைகளால் நிரப்பட்டிருக்கும்
மற்றையது என் கோபத்தால்
வெறுக்கப்பட்டதாக இருக்கும்...
இரண்டையும் போய் பாருங்கள்..”
என்று மலக்குகளை 
நோக்கி இறைவன் கூறினான்!

இறைவன் கட்டளை
இதயத்தால் மலக்குகள் ஏற்றார்கள்
அவனை துதித்தார்கள்
அதன் பின் ஜஹன்னம்
எனும் நரகம் நோக்கி விரைந்தார்கள்!

மலக்குகளுக்கு
முதலில் இறைவனின் கோபம்
பார்க்க ஆசை...
இல்லை அது ஆர்வம்...!
நகர்வை விரைவாக்கினார்கள்
நரகம் போய் நோக்கினார்கள்...!

நரகம் நோக்கிய மலக்குகளை
கவலையும் வேதனையும்
விம்மத் துவங்கியது...
அதன் இழிவுக்காட்ச்சியும்
வதைகூடங்களும் கண்ணீரை
கக்க வைத்தது...!
அத்தனை அவலங்களையும்
பொறுமைக்குள் பொத்திய வண்ணம்
இறைவனின் மறு வீடு நோக்கி
அதாவது சுவர்க்கம் பார்க்க பறந்தார்கள்...!

சுவர்க்கம் கண்டதும்
மலக்குகள் முன்னைய காட்ச்சிகளை மறந்தார்கள்
அதன் எழிலில் பூரித்துப்போனார்கள்
கலங்கிய கண்கள்
மலமலவென்று ஆனந்தக்கண்ணீரை
கங்கையாக கொட்டியது...!
மலர்களாக தூவியது...!

மலக்குகளின் 
மனம் படபடக்கத் தொடுத்தார்கள்
என் இறைவா 
ஒரு பாதியை யாருக்கு
படைத்து வைத்துள்ளாய் என்று
அந்த சுவர்க்கத்தைக்காட்டி
மலக்குகள் கேட்டார்கள்...!

அர்ஸ்ஸை சுழ்ந்து
ஒரு பாதி சுவர்க்கம்
மறு பாதி நரகம்
இரு பாதியும் இனைந்து
முழு உருவமாக இருந்தது!
அப்படி மலக்குகளுக்கு தெரிந்தது...!

உடனே அல்லாஹ் 
சுவர்கத்தை பேசக்கூறி ஏவினான்
சுவர்க்கம் பேசத்துவங்கியது....
“உண்மையாளர்கள் ஈடேற்றம்
பெற்றவர்களுக்கு என்னைப்படைத்தான்”
மறுபடியும் மலக்குகள்
“எல்லாத் தகுகளும் உள்ளவர்கள்
நாங்கள் எங்களுக்காகவா நீ...?”
மீண்டும் சுவர்க்கம்
“இல்லை அபிமானத்தை பேணியவர்கள்
அல்லாஹ்வை நம்பியவர்கள்”
என்றதும் தங்களுக்கில்லையென்று
மலக்குகள் அறிந்து கொண்டார்கள்

உடன் அல்லாஹ் கூறினான்
“என் கையால் படைத்து
என்னால் உயிரை  ஊதி
என் மலக்குகளால்
நேர் நெறிப்படுத்தப்படும்
நெறி முறைப்படி வாழ்ந்து
மண்ணால் முளைத்த இருக்கும்
மூமின்களுக்கும்...!
இன்னும் உயிர் ஊதிய பலருக்கும்
என்று திருவுள்ளமானான் அல்லாஹ்..

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.