புதியவை

22. வானம் பூமியின் பெருமைகள் (இஸ்லாமியப்பார்வையில் உலகம் ) - மிஹிந்தலை ஏ.பாரிஸ்வானம்
பூமித்தாயை நோக்கி
தற்பெருமையில் குளித்தது
இப்படி அது
மார்தட்டத் துவங்கியது

“உன்னை எனக்கு கீழே
வரிசைப்படுத்தி வைத்துள்ளான்
உன்னை விட
வல்லமைகள் முழுவதும்
என்னிடம்தான் உள்ளது
எனது மேனியில்
மலக்குகள் குடியிருக்கிறார்...!
நானே அவர்களின்
தலமாக என்றும் இருக்கிறேன்.

என்னில்தான் அறுஷும் குறுஷும்
உண்மையில் இருக்கிறது
சூரியனும் சந்திரனும்
என்னிடம்தான் மிதக்கிறது
ஒளிக்கீற்றுக்ளை பொழிகிறது

நட்ச்சத்திரங்கள்
தங்கப் பூக்கள் போல்
பளிச்சிண்டு நகைத்து
உன்னைப் பார்த்து
உதடு வளைக்கிறது

மழையைப்  பொழித்து
உன் முகத்தை
மின்னச் செய்து விடுகிறேன்
என் கண்ணீர்த்துளிகளை 
நீ குடித்தால்தான்
உன் முகத்தில் என்றும்
புன்னகை பூ மலரும்!

என்னிடம் இருந்தே
உன்னிடம் இறங்கும் வஹி
அதாவது இறைக் கட்டளை
உனக்கான நிறைக்கட்டளைகளை
இறைவன் பிறப்பிக்கிறான்!

இன்னும் இயம்புவதென்றால்
உன்னை இயக்கும் வண்ணம்
அதிகாரம் எனக்கு உண்டு
அது இறைவன் எனக்கு தந்திருக்கும்
நிகரில்லாத வரமே ஆகும்!”

பூமி சற்று சிந்தித்த வண்ணம்
“என் இறைவா...!
தண்ணீரின் முகத்தில்
என்னை நீள விரித்து விட்டாய்...
என்னுடலில் பிணைந்து
மரக்கிளைகளின் வேர்களை
பிணைந்து ஒட விட்டாய்...!

என்னுடலில் அருவிகளை
ஒளிந்து ஓடச் செய்தாய்...
மலைகளை முளைக்க விட்டாய்...
மரங்களை நட்டு வைத்தாய்
அதில் கனிகளை தொங்க விட்டாய்
என்னை உருஞ்சும்
உற்ப்பத்திகளை என்னில் விட்டு
வானத்தை மட்டும் ஏன்
மகத்துவத்தோடு படைத்து விட்டாய்...?
இவையெல்லாம் எதற்கு...?”
என்று கேள்விக்கணைகளை 
தொடுத்த வண்ணம்
இறைவனைதத்துதித்தது
தன் பொறுமைகளை
புகழ்ந்து இறைவனிடம்
கேள்விகளை பூமி அறைந்து...!

உடனே இறைவன் வஹி
இறக்கி வைத்தான்...
“உன்னிலிருந்து மண்ணெடுத்து
ஒப்பட்ட ஒரு உருவம்
கருவாக்கப்படும்
கண் கலங்காமல்
மௌனமாக இருந்து கொள்....!!

தொடர்ந்தும் அல்லாவின்
சொல் வஹியாக விழுந்தது..

உருவில் ஊதி
உயிரை நுழைப்பேன்

ஒப்பில்லாத எழிலை தப்பாமல் கொடுப்பேன்
தவறிப்போனால் தண்டிப்பேன்
வேதங்களை இறக்கி வைப்பேன்
வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பேன்

இளமையைக் கொடுப்பேன்
முதுமையைக் கொடுப்பேன்
உன் முதுகில்
ஓடி விளையாடி மகழச் செய்வேன்
உன் வயிற்றில்
ஜடத்தை புதையச் செய்வேன்...
இப்ப நீ
பெருமைப் படு பூமியே என்று
அல்லாஹ் திருவுள்ளமானான்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.