புதியவை

23.ஜான் பூமி நோக்கியது ( இஸ்லாமியப்பார்வையில் உலகம் ) - மிஹிந்தலை பாரிஸ்


பூமியின் புன்முறுவல்கள் முழுவதும் 
கண்களை கவரும் தருணத்தில்
மண்ணை நோக்கி ஜானை
இறைவன் தரையிறக்கி வைத்தான்!

பூமியின் அனுமதியோடு
இறைவன் ஜின்களை கூட்டமாக
மண்ணில் விதைத்தான்...!
சுமார் எழுபதாயிரம் கூட்டம்
இறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இறைவனை துதிப்பதற்கு
ஜின்களிடம் உத்தரவாதம் பெற்றான்
சத்தியம் செய்த பின்தான்
தன்னுடலில் தடம் பதிக்கும் படி
பூமி கட்டளையிட்டது
ஜின்கள் ஒத்துக்கொண்ட பின்
இறைவன் இறக்கி வைத்தான்!

இறைவனின் ஏற்பாடுகள்
அனைத்தும் அவனை துதிப்பதற்கு என்று
பின் பூமியும் உணர்ந்து
தலைவணங்கியது இறைவனை!

ஜின்கள் நீண்ட காலம்
அல்லாஹ்வின் கட்டளைகளை மீறாமல்
துதித்தார்கள்
அவர்களின் வணக்க வழிபாடுகளை
ஒப்பிட முடியாத அளவில்
வணக்கத்தில் ஈடுபட்டார்கள்

பின் காலம் நகர்ந்தது
அவர்களுக்குள் பாவங்கள் விளைந்தது
அதனால் இரத்தம்
சிந்துவதில் உறைந்து போனார்கள்

பூமித்தாய் வெறுத்தாள்
அல்லாஹ்விடம் உரைத்தாள்
“என்னைப்படைத்த நாயகனே...!
என் முதுகு முழுவதும்
அக்கிரமங்களால் நிரப்படுகிறது
இன்னுமொரு படைப்பை 
உருவாக்க நீ நினைக்கையில்
என் முதுகு இரத்தக்கறையில்
தினம் குளிக்கிறது....
இனிமேலும் ஒரு படைப்பு
என் மேல் வேண்டாம் இறைவா...!”
என்று அழுது புலம்பிய வண்ணம்
துதித்து மண்டாடியது...!

இறைவனின் வஹி
தாமதம் இல்லாமல் தரையிறங்கியது....
“ஏய் பூமியே நீ
உன் வாயை மூடு
உன் பணி எதுவோ
அதைச் செய்...!
அவர்களை வழி நடத்தவே
அகிலம் பார்ப்பார்கள்
என் நபிமார்கள்...”

பூமி பயந்து
இறைவனை துதித்தது
தன் பணி எதுவோ
அதை மட்டும் செய்தால்
அதுவே போதுமென்று
அமைதியில் குதித்தது

அன்றைய இறை கட்டளைகளை
இன்றும் மதித்து
இறைவனை துதித்து
என்றும் வாழ்கிறது...

அந்த பூமியே என்றும்
உலகில் அன்னையாகிப்போனது
அதன் முதுகு மடியாகவும்
வயிறு மாளிகையாவும்
மண் குடிசைகயாகவும்
கண்முன்
சாட்சி பகிர்கிறது
உண்மைச்சரித்திரம்
உலகில் நிகழ்கறது

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.