புதியவை

எம்.எச் 370 விமானத்தினுடையது என சந்தேகிக்கப்படும் பாகம் மேலதிக ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது

எம்.எச் 370 விமானத்தினுடையது என சந்தேகிக்கப்படும் பாகம் மேலதிக ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது
கண்டெடுக்கப்பட்ட மலேஷியாவின் எம்.எச் 370 விமானத்தினுடையது என சந்தேகிக்கப்படும் விமானத்தின் பாகம் மேலதிக ஆய்வுகளுக்கான பிரான்ஸிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானமொன்றின் பாரியளவான பாகமொன்று இந்து சமுத்திரத்தில் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டது.
கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் பாகம் மலேஷியாவின் எம்.எச் 370 விமானத்தினுடையது என சந்தேகிக்கப்டுகின்றது.
இந்த நிலையில் இந்து சமுத்திரத்தின் ரீயூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விமான சிதைவுகள் பிரான்ஸிற்கு அனுப்பப்பட்டுள்ளன.
விமான சிதைவுகள், மேலதிக ஆய்வுகளுக்காக பிரான்ஸில் உள்ள தவ்லோஸுக்கு கப்பல் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக மலேஷிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த சிதைவுகள் காணாமல் போன எம் எச் 370 விமானத்தின் பாகங்களாக இருக்கக்கூடும் என மலேஷிய பிரதமர் கூறியுள்ளார்.
விமான இறக்கையின் ஒரு பகுதியே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் பாகம் கொண்டு செல்லப்பட்டுள்ள தவ்லோஸூக்கு மலேஷியாவின் ஆய்வுக்குழுவொன்றும் சென்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கண்டறியப்படும் அனைத்து தகவல்களும் பொது மக்களுக்கு அறியத்தரப்படும் என மலேஷிய பிரதமர் நஜீப் ரஸாக் தெரிவித்துள்ளார்.
239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் நோக்கி பயணித்த எம் எச் 370 விமானம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காணாமற் போனமை குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.