புதியவை

தேர்தல் சட்ட மீறல் தொடர்பில் 663 முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் சட்ட மீறல் தொடர்பில் 663 முறைப்பாடுகள் பதிவு
தேர்தல் சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் இதுவரை 663 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக நியமனங்கள் மற்றும் பதவியுயர்வு வழங்கப்பட்டமை தொடர்பில் அதிகப்படியாக 154 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் செயலகத்திற்கு 148 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறித்து 95 முறைப்பாடுகளும் அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டமை குறித்து 55 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.