புதியவை

9 வயது சிறுவன் உட்பட கர்பிணியின் சடலங்கள் மீட்பு.


குருநாகல், நிகதலுபொத பகுதியில்  39 வயதுடைய கர்பிணியொருவரையும் அவரது 9 வயது மகனையும், கிணறொன்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (12) காலை சடலங்களாக மீட்டதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளதுடன் இதுதொடர்பில் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். குடும்பச் சண்டை காரணமாக இவ்விருவரும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் சடலங்கள் தற்போது, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.