புதியவை

கமெராவின் ப்ளாஷினால் பார்வையை இழந்த மூன்று வயதுக் குழந்தை

கமெராவின் ப்ளாஷினால் பார்வையை இழந்த மூன்று வயதுக் குழந்தை
கமெராவின் ப்ளாஷ் ஒன் ஆகி இருப்பதை மறந்து போய், பிறந்து 3 மாதங்களே ஆன குழந்தையை நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார் அக்குழந்தையின் குடும்ப நண்பர் ஒருவர். எனினும் ப்ளாஷின் பாதிப்பினால் ஒரு கண்ணின் பார்வையை இழந்துள்ளது அந்த குழந்தை.
புகைப்படம் எடுத்தபின் குழந்தையின் கண்களில் ஏதோ மாற்றத்தை கண்ட பெற்றோர்கள் அதிர்ந்து போய் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு மருத்துவர்கள், மிக அருகாமையில் ப்ளாஷ் போடப்பட்டுள்ளது (கிட்டத்தட்ட 10 இன்ச் அருகாமையில்) அதனால் குழந்தையின் வலது கண் பார்வையை இழந்துள்ளது என்று கூறியுள்ளனர்.
மேலும், சக்தி வாய்ந்த ப்ளாஷ் கண்ணின் கருமணியை பாதித்துள்ளது, அந்த பாதிப்பானது மத்திய பார்வையை இழக்க செய்துள்ளது என்றும் மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர். இன்னும் இந்த ஆண் குழந்தைக்கு பெயர் கூட வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.